உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பால் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்து லாபத்தில் சுமார் 9 வருடத்தைச் சரிவைச் சந்தித்துள்ளது. இது சக ஆட்டோமொபைல் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வர்த்தகச் சரிவு முன்கூட்டியே கணிக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுகள் வெளியான நாளில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தைக் கைவிடாமல் அதிகளவிலான முதலீட்டைச் செய்து சுமார் 2.3 சதவீத வளர்ச்சியை டோயோட்டா பங்குகள் பதிவு செய்துள்ளது.
லாபம்
ஜூன் காலாண்டில் டோயோட்டா 179 பில்லியன் யென் மதிப்பிலான நஷ்டத்தை அடையும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில், கடந்த வருட லாப அளவீடுகளை விடவும் 98 சதவீத சரிந்து 13.9 பில்லியன் யென் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது டோயோட்டா.
கணிப்புகளைக் காட்டிலும் அதிகமான லாபத்தை அடைந்துள்ள நிலையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது டோயோட்டா.
இலக்கு
கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் நடப்பு நிதியாண்டில் டோயோட்டா-வின் செயலாக்க லாப அளவீடுகள் 500 பில்லியன் யென்- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 9 வருடத்தில் குறைவான அளவீடாகும்.
வளர்ச்சி
உலகம் முழுவதிலும் டோயோட்டா வர்த்தகம் செய்து வரும் நிலையில் சில இடங்களில் மட்டுமே தற்போது வர்த்தகச் சந்தை மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு வருவதாகவும், இன்னும் பல நாடுகளில் வர்த்தகம் இன்னும் மந்தமாகவே இருக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்திக்கும், ஆனால் கண்டிப்பாக மீட்சி அடையும் என டோயோட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் Ryo Sakai தெரிவித்துள்ளார்.
விற்பனை
நடப்பு நிதியாண்டில் டோயோட்டா சுமார் 9.01 மில்லியன் கார்களை விற்பனை செய்யும் எனக் கணித்துள்ளது. இது கடந்த வருடத்தின் 10.46 மில்லியன் கார்களை விற்பனையை விடவும் இந்தக் கணிப்ப 13 சதவீதமாகும்.
மேலும் இந்த 9.01 மில்லியன் கார் விற்பனை கணிப்பு 9 வருடச் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கச் சந்தை
ஜப்பான் நாட்டைத் தாண்டி டோயோட்டா வட அமெரிக்காவில் இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு இப்பகுதியில் அதிகமாக இருப்பதால் வட அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என டோயோட்டா கணித்துள்ளது.
சீனா
இதேபோல் சீனா தற்போது கொரோனா-வை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு வழி அமைத்துக்கொடுத்துள்ளதால் சீனாவில் டோயோட்டா-வின் கார் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications