கிரிப்டோகரன்சிகள் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு முதலீட்டு கருவிகளாக மாறி வருகின்றன. பொதுவாக உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை தான் உயரும் .ஏனெனில் பாதுகாப்பான முதலீடாக கருதி பலரும் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். ஆனால் சமீப காலமாக அந்த போக்கு மாறி இருக்கிறது.
தங்கத்தை வாங்கி வந்த முதலீட்டாளர்கள் தற்போது அதற்கு நிகராக கிரிப்டோ கரன்சிகளையும் வாங்க தொடங்கி இருக்கின்றனர் .இதன் காரணமாக சர்வதேச அளவில் பிட்காயின் எதிரியும் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு வரலாறு காணாத உச்சங்களை எட்டி வருகிறது. இந்தியாவை சேர்ந்த செல்வந்தர்களும் தங்களுடைய பணத்தை பெரும் அளவில் கிரிப்டோ கரன்சிகளை நோக்கி திருப்பி விடுகிறார்களாம் .

இந்திய பங்குச் சந்தை கடந்த ஜனவரி மார்ச் மாதங்களில் பெரிய சரிவை கண்டது, அதிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. தங்கமும் கடந்த மூன்று நான்கு மாதங்களாக பெரிய அளவிலான உயரத்தை எட்டவில்லை. வட்டி குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக வங்கி டெபாசிட்களுக்கான வட்டிகளும் குறைந்துவிட்டன. எனவே இந்தியாவை சேர்ந்த வசதி வாய்ப்பு கொண்ட முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தற்போது கிரிப்டோகரன்சிகளில்தான் முதலீடு செய்கிறார்களாம்.
உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் தங்களுடைய போர்ட்போலியோவில் ஒரு கணிசமான பகுதியை கிரிப்டோ கரன்சிகளுக்கு ஒதுக்குவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் முதலீட்டுப் போக்கு பெரிய மாற்றம் கண்டு இருக்கிறது என கூறுகிறார் காயின் ஸ்விட்ச் நிறுவனத்தின் தலைவரான அதுல். முதலில் கிரிப்டோ கரன்சி முதலீட்டுக்கு தயக்கம் காட்டிய இவர்கள் தற்போது மிக தீவிரமாக கிரிப்டோ கரன்சிகளை நோக்கி தங்களுடைய பணத்தை திருப்பி விட்டிருக்கின்றனர் என கூறுகிறார்.
தங்களுடைய செயலியில் தற்போது புதிதாக 3500 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதாக காயின் டிசிஎஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது . அண்மையில் தான் சர்வதேச அளவில் பிட்காயின் மதிப்பு 1, 20,000 டாலர்கள் என்ற அளவை எட்டியது இந்திய ரூபாய் மதிப்பில் இது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். கடந்து ஓராண்டு காலத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு 90% வரை உயர்ந்து இருக்கிறது. இன்றைய தினம் கூட பிட்காயின் மதிப்பு 1,18,00 டாலர்களாக இருக்கிறது.
மற்ற கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் பாரம்பரிய முதலீடுகளில் இருந்த செல்வந்தர்கள் கிரிப்டோகரன்சிகளை நோக்கி திரும்பி இருக்கின்றனர் . நீண்ட காலத்தில் நோக்கத்தில் முதலீடு செய்யக்கூடிய பலரும் தற்போது அதிகளவில் கிரிப்டோவில் முதலீடு செய்வதாக இது சார்ந்து இயங்கக்கூடிய முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டவர் என்பதால் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் தான் இருக்கும் என்ற நம்பிக்கையே பலரையும் இதில் முதலீடு செய்ய வைக்கிறது. இருந்தாலும் இந்தியாவின் இதுவரை கிரிப்டோ கரன்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை. கிரிப்டோவில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30 சதவீத மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் இதனை விரும்புவதில்லை.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications