மும்பை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய சொத்தில் சில பகுதியை அறக்கட்டளைக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், தன்னுடைய செல்லப்பிராணியை பராமரிப்பதற்கும், வீட்டு வேலையாட்களுக்கும் என அவர் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. இதில் சுவாரசியமான ஒரு தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
ரத்தன் டாடா தனக்கு சொந்தமான மூன்று முக்கிய ஆயுதங்களை தனது நீண்ட கால நண்பரான மெஹில் மிஸ்திரிக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார். ஆரம்ப கட்டத்திலேயே இந்தியாவில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற ஒரு சிலரில் ரத்தன் டாடாவும் ஒருவர். தற்போது அவருடைய மூன்று துப்பாக்கிகள் தான் மெஹில் மிஸ்திரிக்கு செல்கிறது.

டாடா குழும நிறுவனங்களில் டாடா குடும்ப உறுப்பினர்களுக்கு பிறகு ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் மிஸ்திரி குடும்பம் தான். மிஸ்திரி குடும்பத்தை சேர்ந்த சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
ஆனால் சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழும நிறுவன நிர்வாகத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சைரஸ் மிஸ்திரியின் தாயாரும், மெஹில் மிஸ்திரியின் தாயாரும் சகோதரிகள் ஆவர்.
மெஹில் மிஸ்திரி பலோன்ஜி குழும நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார். இவர் 2022ஆம் ஆண்டில் டாடா அறக்கட்டளையில் ஒரு உறுப்பினராக இணைந்தார். ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்தார். அவருக்கு தான் ரத்தன் டாடா தன்னுடைய மூன்று துப்பாக்கிகளும் சொந்தமாக்கப்பட வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக 1988 ஆம் ஆண்டு ரத்தன் டாட்டா பதவி ஏற்பதற்கு முன்னதாக அதன் தலைவராக இருந்தவர் சுமந்த் மூழ்காவுக்கர். இவர் தான் பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றை ரத்தன் டாட்டாவுக்கு பரிசாக வழங்கினார்.
மூழ்காவுக்கர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் நடைமுறை வருவதற்கு முன்பாக காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். அதற்காக அவன் பயன்படுத்திய ஒரு துப்பாக்கியை ரத்தன் டாடாவுக்கு பரிசாக வழங்கினார்.
மற்ற இரண்டும் ரத்தன் டாடாவின் தந்தை நாவல் டாடா மற்றும் ஜேஆர்டி டாடா ஆகியோரிடம் இருந்து பரம்பரை சொத்தாக ரத்தன் டாடாவுக்கு கிடைக்கப்பெற்றது. எனவே இந்த மூன்று துப்பாக்கிகளுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையே உணர்வுபூர்வமான ஒரு உறவு இருக்கிறது. ரத்தன் டாடாவின் உணர்வுகளோடு தொடர்புடைய இந்த மூன்று துப்பாக்கிகளும் மெஹில் மிஸ்திரிக்கு செல்கிறது.
ரத்தன் டாடா காலமானதை அடுத்து அவருடைய ஆயுதங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டன. தற்போது உயில் அடிப்படையில் இது மெஹில் மிஸ்திரிக்கு சென்றுள்ளதால் அவர் முறையான உரிமம் பெற்று இந்த உயிலினை காட்டி காவல்துறையினரிடம் இருந்து அந்த மூன்று துப்பாக்கிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவரிடம் உரிமம் இருந்தால் அவர் தற்போது பயன்படுத்தும் ஆயுதங்களோடு இந்த ஆயுதங்களையும் பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது .
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications