அண்மைக்காலமாக நிறுவனங்கள் ஒரு நபரை வேலைக்கு தேர்வு செய்வதற்காக விதிக்கும் தகுதி வரம்புகள் பெரிய மாற்றங்களை கண்டுள்ளன. பெரும்பாலானவர்கள் எதற்காக படித்தார்களோ அந்த வேலைகளுக்கு செல்வதே கிடையாது. குறிப்பிட்ட பிரிவுகளில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் கூட பெரிய நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய சூழல் நிலவுகிறது.
அந்த வகையில் கல்லூரி பட்டப்படிப்பு இல்லாமல் அதிக ஊதியம் தரக்கூடிய இந்தியாவில் கிடைக்கும் ஐந்து வேலை வாய்ப்புகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வெப்சைட் டெவலப்பர் /டிசைனர்: கோடிங் மற்றும் வெப்சைட் டெவலப்மென்ட், வெப்சைட் டிசைன் ஆகியவை உங்களுக்கு பிடித்தமான துறைகளாக இருந்தால் வெப்சைட் டெவலப்மெண்ட் மற்றும் டிசைன் தொடர்பான சான்றிதழ் படிப்புகளை முடித்துக் கொண்டால் உங்களுக்கு எளிதாக இந்த துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய சூழலில் இந்தியாவில் வெப்சைட் டெவலப்பர் மற்றும் டிசைனர் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த துறையை பொறுத்தவரை நுழைவு நிலையில் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
கமர்ஷியல் பைலட்: இந்தியாவில் கல்லூரி பட்டப்படிப்பு இல்லாமல் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த வேலைகளில் கமர்சியல் பைலட் வேலையும் ஒன்று. 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களை பயின்றவர்கள், கமர்சியல் பைலட் பணிக்கான பயிற்சி பெற விண்ணப்பம் செய்யலாம். இதற்கான உரிமம் பெற்று விட்டால் போதும் அவர்கள் விமானியாக செயல்பட முடியும். தற்போது இந்தியாவில் தொடக்கநிலை கமர்சியல் பைலட்டுகளுக்கு ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது.அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் வரை அதிகபட்ச ஊதியம் கிடைக்கும்.
விமான பணியாளர்கள்: கேபின் க்ரூ எனப்படும் இந்த வகை பணிக்கு சேர்வதற்கு கல்லூரி பட்டப்படிப்பு தேவை கிடையாது, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் குறிப்பிட்ட வயதிற்குள் இருப்பவர்கள், நல்ல உடல்வாகக் கொண்டவர்கள் இதற்கான பயிற்சி கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெற்று உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கேபின் க்ரூவாக பணிக்கு செல்பவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. இவர்களுக்கு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். இவர்கள் பணி செய்யும் விமான சேவை நிறுவனம் மற்றும் இவர்களது பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் ஏஜென்ட்: மார்க்கெட்டிங் மற்றும் பைனான்ஸ் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் இந்தியாவில் ரியல் எஸ்டேட் முகவராக செயல்பட்டு வெற்றிகரமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இதற்கு கல்லூரி பட்டப் படிப்பு தேவையில்லை. சிறந்த பேச்சு திறமை இருந்தால் போதும். இதற்காக முறைப்படி பயிற்சி பெற்று உரிமம் பெற்றால் எளிதாக ரியல் எஸ்டேட் முகவராக பணியாற்ற முடியும். இந்த துறையை பொறுத்தவரை நுழைவுநிலையில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். ஒருவர் தனிப்பட்ட திறமையை பொறுத்து இது அதிகரிக்கும்.
எத்திக்கல் ஹேக்கர்: தற்போது தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் மக்கள் இணையத்தை சார்ந்து செய்யக்கூடிய நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில் ஹேக்கர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. 12-ம் வகுப்பு முடித்து இருந்தாலே போதும் உரிய சான்றிதழ் படிப்பினை முடித்துவிட்டு இந்த துறையில் ஒருவரால் பணிக்கு செல்ல முடியும். சைபர் செக்யூரிட்டி துறையில் எத்திக்கல் ஹேக்கர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த துறையை பொறுத்தவரை ஒரு நபரின் தனித்திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 28 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications