சீனாவுக்கு எதிராகவும், சீன சேவைகளுக்கு எதிராகவும் அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது டிரம்ப் தலைமையிலான அரசு டென்சென்ட் நிறுவனத்தின் Wechat மற்றும் Wechat பேமெண்ட் சேவைகளை அமெரிக்காவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மெசேஜ் சேவை தளமாக விளங்கும் Wechat-ன் தாய் நிறுவனமான டென்சென்ட் உலகில் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் அமேசான், வால்மார்ட் போன்ற பல நிறுவனங்களுக்குப் போட்டியாகத் திகழ்கிறது.
இந்நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட தடையின் காரணமாக டென்சென்ட் பங்கு மதிப்பு தாறுமாறாகக் குறைந்து சீன முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சீனா
மக்களின் தனிநபர் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பைக் கருதி அமெரிக்கா சீனா நிறுவனங்களின் சேவைகளையும், வர்த்தகத்தையும், பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாகச் சீனா- அமெரிக்கா இடையேயான நட்புறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
தடை
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு டென்சென்ட் நிறுவனத்தின் Wechat மற்றும் Wechat பேமெண்ட் சேவைகளை அமெரிக்காவில் பயன்படுத்தத் தடை விதித்த நிலையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஹாங்காஹ் சந்தையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் சரிந்தது.
45 பில்லியன் டாலர்
அமெரிக்க அரசு டென்சென்ட் நிறுவனத்தின் மீது விதிக்கப்படும் தடை குறித்துக் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை செய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் எதிரொலியாகக் கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமாப் 45 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை டென்சென்ட் இழந்து நிற்கிறது.
5 சதவீத சரிவு
வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 10 சதவீதம் குறைந்து வர்த்தக முடிவில் 5 சதவீத சரிவை எதிர்கொண்டது. இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஓரே நாளில் 43.6 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது.
45 நாள் கெடு
மேலும் அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவின் படி அடுத்த 45 நாட்களுக்குள் ஆப்பிள் மற்றும் கூகிள் ஸ்டோரில் இருந்து Wechat நீக்கப்படும். இதனால் அமெரிக்காவில் வாழும் பல லட்சம் மக்கள் Wechat சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
இதேபோல் இந்த 45 நாட்களில் பிற சேவைகளுக்கு வாடிக்கையாளர் மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
8வது நிறுவனம்
சந்தை மதிப்பீட்டில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக Wechat-ன் தாய் நிறுவனமான சென்சென்ட் உள்ளது. ஆப்பிள், சவுசி ஆராம்கோ, மைக்ரோசாப்ட், அமேசான், ஆல்பபெட், பேஸ்புக், அலிபாபா-வை தாண்டி 8வது இடத்தில் டென்சென்ட் உள்ளது.
டென்சென்ட் உலகிலேயே மிகப்பெரிய வீடியோ கேம் நிறுவனமாகவும் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications