நாட்டில் பலரும் ஏதேனும் ஒரு வணிக யோசனை தங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இன்விடேஷன் கார்டு பிரிண்டிங் பிசினஸை தொடங்கலாம். இந்த பிசினஸ் தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடு தேவை? ஒரு வேலை ஆரம்பித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
நம் நாட்டில் எப்பொழுதுமே கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு பஞ்சம் இருக்காது. இது போன்ற சூழ்நிலைகளில் கண்டிப்பாக இன்விடேஷன் கார்டுகள் தேவைப்படும். எனவே கார்டு பிரிண்ட் செய்யும் தொழிலில் இறங்கலாம். வருடம் முழுவதுமே உட்கார்ந்து இதற்கு வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது, முகூர்த்த தினங்கள், பர்த்டே பார்ட்டிகள், நிச்சயதார்த்த விழாக்கள் போன்ற முக்கிய விழாக்களின் போது மக்கள் இன்விடேஷன் கார்டுகளை பிரிண்ட் செய்ய விரும்புவார்கள். இது குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய லாபகரமான தொழிலாகும்.

அதுவும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டம் திருமண சீசன் ஆகும். ஒரு திருமணத்தின் மிக முக்கியமான விஷயம் கல்யாண பத்திரிகைகள். இதன் மூலம் நீங்கள் ஆண்டு முழுவதும் பணம் சம்பாதிக்கலாம். பல்வேறு வகையான பத்திரிகைகள் உள்ளன. இதன் விலை சுமார் 3 ரூபாய் இருந்து 20 ரூபாய் வரை இருக்கும். திருமண சீசனின் போது நல்ல ஆடர்கள் கிடைத்தால் இதன் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம்.
முதலீடு: திருமண இன்விடேஷன் கார்டுகளை பிரிண்ட் செய்வதற்கு மெஷின் வாங்க ரூ.2 முதல் ரூ.5 லட்ச ரூபாய் வரை செலவாகலாம். மேலும் கார்டுகளைப் பெற்று அதில் தான் பிரிண்ட் செய்ய வேண்டும். இது போன்ற கார்டுகள் வெவ்வேறு வடிவங்களிலும், கேட்கும் அளவுகளிலும் சந்தைகளில் இருந்து பெறலாம். மொத்த சந்தைகளில் இருந்து வாங்கும்போது இன்னும் விலை மலிவாக வாங்கிக் கொள்ளலாம். கல்யாணத்திற்கு மட்டுமின்றி பிறந்தநாள் விழாக்கள் போன்றவற்றிற்கும் மக்கள் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
வருமானம்: நீங்கள் செய்யும் விளம்பரத்தை கொடுத்து உங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள். எனவே இந்த பிசினஸ் மூலம் இவ்வளவு வருமானம் வரும் என்று குறிப்பிட்டு கூறி விட முடியாது. வாடிக்கையாளர்கள் அதிகம் வர வர உங்களுடைய வருமானமும் அதிகரிக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுவோருக்கான ஐடியா மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமானாலும் அதற்கு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சந்தையை ஆராய்ந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications