பொதுவாக இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் ஒரு பண்டிகையை போல கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் வகையில் மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க சிலர் வெல்டிங் பிளானர்களை நியமிக்கின்றனர். திருமண விழாக்கள் முதல் உயர்தர உணவு மற்றும் பானங்கள் வரை அனைத்தையுமே ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்துகின்றனர்.
சமீபத்தில் அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு திருமணம் தொடர்பான சில புள்ளி விவரங்களை அறிவித்தது. இந்த புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் இந்த ஆண்டு 4.25 லட்சம் கோடி வர்த்தகம் திருமண நிகழ்ச்சியால் நடந்துள்ளது. உலகளாவிய திருமண சேவை சந்தை 2020-ஆம் ஆண்டில் $160.5 பில்லியனை எட்டியுள்ளது. அத்தகைய சூழலில் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த சந்தை $414.2 பில்லியனை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்றெல்லாம் திருமணங்கள் மிகப் பெரிய விளம்பரம் ஆகிவிட்டது. இப்படி ஆடம்பரமாக நடத்தப்படும் திருமணங்களில் சிலர் வெட்டிங் இன்சூரன்ஸ் வாங்கி வைக்கின்றனர். வெட்டிங் இன்சூரன்ஸ் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
திருமண காப்பீடு என்றால் என்ன?: இன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களால் பல்வேறு காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் காப்பீடுகளில் ஒன்று தான் வெட்டிங் இன்சூரன்ஸ் என்று சொல்லப்படும் திருமண காப்பீடு. இந்தக் காப்பீட்டின் மூலம் உங்களுடைய திருமணத்தை பாதுகாப்பாக நடத்த முடியும். திருமணத்தில் எதிர்பாராத நிச்சயமற்ற தன்மைகள் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்க வேண்டி பலர் திருமண காப்பீட்டை பெறுகின்றனர்.
உதாரணமாக திருமண விழாவின்போது விபத்துகள் ஏற்படுவது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இந்த காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமண காப்பீட்டின் ப்ரீமியம் என்பது நீங்கள் நடத்தும் திருமண விழாவில் பங்கேற்பாளர்கள் மற்றும் நீங்கள் பெரும் சேவையை பொறுத்தது. திருமண சேவைகள் அதிகமாக இருந்தால் பிரீமியமும் அதிகமாக செலுத்த வேண்டும்.
திருமணம் என்பது வாழ்நாளில் ஒரே ஒரு முறை வரும் சிறப்பான நிகழ்வு. இந்த சிறப்பான நாளில் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு திருமண காப்பீடு வழங்கப்படுகிறது. திருமணத்திற்கு கூடவா காப்பீடு இருக்கிறது என நீங்கள் கேட்பது கேட்கிறது. திருமணம் மட்டுமின்றி விபத்து காப்பீடு, பயணக் காப்பீடு வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு என பல்வேறு வகையான காப்பீடுகள் உள்ளன.
சிலருக்கு திருமணத்திற்கு காப்பீடு இருக்கிறது என்ற விவரங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. திருமணத்தை பாதுகாப்பாக நடத்தி முடிக்க விரும்புபவர்கள் வெட்டிங் இன்சூரன்ஸ் பெறலாம். ஆனால் காப்பீடு வழங்குபவரின் பாலிசி குறித்து முன்னரே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பிரீமியத்திற்கும் ஒவ்வொரு வகையான கவரேஜ் இருக்கும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவரேஜ் எந்தெந்த சேவைகளை உள்ளடக்கியது என்பதை தெரிந்து கொண்டு பலன் பெறுங்கள்.


Click it and Unblock the Notifications