இந்தியாவில் திருமணங்கள் என்பது மிகப்பெரிய விழாவாகும். இதில் ஆடம்பரமான கொண்டாட்டங்கள், பல்வேறு நிகழ்வுகள், மரபுகள் என கலாச்சாரத்தோடு வேரூன்றிய பல விஷயங்கள் இருக்கும். ஆனால் நாடு முழுவதுமே உள்ள பெரும்பாலான திருமணங்களில் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் அதிக செலவுகள். மக்கள் பெரும்பாலும் தங்கள் சேமிப்பில் அதிக தொகையை தங்களுடைய திருமணத்திற்காக செலவிடுகின்றனர்.
சில நேரங்களில் அதுவும் போதுமானதாக இருக்காது. செலவுகளை சமாளிக்கும் பொருட்டு சிலர் கடன் பெறுகின்றனர். நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டம் திருமண சீசன் என்று சொல்லலாம். எனவே இந்த மாதங்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும். திருமண சீசன் தொடங்குவதால் செலவுகளை ஈடுசெய்ய பல்வேறு கடன் விருப்பங்கள் குறித்து ஆராய்வது முக்கியமாகும்.

திருமணக் கடன் என்றால் என்ன?: திருமணக் கடன் என்பது ஒரு வகையான தனிநபர் கடனாகும் மண்டபத்திற்கான இடம், கேட்டரிங் போன்ற பல்வேறு திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு செலவு செய்வதற்காக திருமணக் கடன்கள் வழங்கப்படுகிறது. இதை சில மேட்ரிமோனி நிறுவனங்களும் வழங்குகின்றன. சமீபத்தில் "matrimony.com" வழங்குவுள்ளதாக அறிவித்தது. இதற்காக சில நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதாகவும் தெரிவித்திருந்தது.
கிரெடிட் கார்டு கடன்கள்: கிரெடிட் கார்டு கடன்கள் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை பெற மக்கள் பயன்படுத்தும் ஒன்றாகும். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு ஏற்ப கிடைக்கிறது. அதோடு கிரெடிட் கார்டு கடன்களுக்கு வரம்பு உண்டு. நீங்கள் கிரெடிட் கார்டு அல்லது வெட்டிங் லோன் என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அவற்றுக்கு உள்ள வட்டி விகிதங்கள், வருடாந்திர கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் குறித்து தெரிந்து கொண்டு இறங்க வேண்டும்.
கிரெடிட் கார்டு கடன் மற்றும் திருமண கடன் பெறுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
வட்டி விகிதங்கள்: கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடும்போது வெட்டிங் லோன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் தான் வசூலிக்கப்படுகின்றன. எனவே அதிக அளவிலான தொகையை கடன் பெறும்போது வெட்டிங் லோன்களைப் பயன்படுத்தலாம்.
திருமணத்திற்காக ஒருவர் எவ்வளவு செலவு செய்யலாம் மற்றும் எந்த வகையான நிதி விருப்பங்களை தேர்வு செய்யலாம் என்பது கடன் பெறுபவரின் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொருத்தது.
கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்: திருமணக் கடன்களுடன் ஒப்பிடும்போது கிரெடிட் கார்டு பெறுவதற்கு குறைந்த அளவிலான ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே உடனடியாக கடன் பெற கிரெடிட் கார்டுகள் உதவும். அதோடு கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டுகள் மற்றும் கேஷ் பேக்குகளும் வழங்கப்படுகிறது. எனவே இவை திருமண செலவுகளை ஈடுசெய்ய உதவும். ஆனால் கிரெடிட் கார்டு கடன்களுக்கு வருடத்திற்கு 35 முதல் 40 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டையும் சேர்த்து பயன்படுத்தலாம்: கிரெடிட் கார்டுகள் மற்றும் திருமண கடன்கள் கடைசி நேரத்தில் பணம் கிடைக்காத பொழுது திருமணத்திற்காக செலவு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இரண்டையுமே கருத்தில் கொள்வதற்கு முன்பு அதை சரியான முறையில் திருப்பி செலுத்தி விட முடியுமா? என்பதை முடிவு செய்துவிட்டு இறங்குங்கள்.
அதோடு கிரெடிட் கார்டு கடன்களை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து அவை நிதி சிக்கலை ஏற்படுத்தலாம். கிரெடிட் கார்டு கடன்கள் மட்டுமின்றி திருமண கடன்களையும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
திருமணத்தின் போது ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கு மேலே கூறப்பட்டுள்ள கடன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கடன்களை தேர்வு செய்வதற்கு முன்பு சரியான திட்டமிடலுடன் தேர்வு செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications