வேர்ல்டு எகனாமிக் ஃபோரம் (WEF) தலைவர் மற்றும் சிஇஓ Borge Brende, தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று பில்கேட்ஸ் பகிரங்க மன்னிப்பு இன்று WEF தலைவர் ராஜினாமா என எப்ஸ்டீன் மறைந்தும் இவர் செய்த குற்றங்களின் தாக்கம் குறைந்தபாடு இல்லை.
2017இல் பதவியேற்று சுமார் 8.5 ஆண்டுகள் WEF அமைப்பின் தலைவராக பணியாற்றிய போர்ஜ் பிரெண்டே, இப்போது பதவி விலகுவது சரியான நேரம் என்று கூறியுள்ளார். டாவோஸ் உச்சி மாநாட்டை நடத்தும் இந்த அமைப்பின் நற்பெயரை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போர்ஜ் பிரெண்டே தனது ராஜினாமா அறிவிப்பில் எந்த சர்ச்சையையும் குறிப்பிடாமல், தனது பணி காலம் பலனளிப்பதாகவும், அமைப்பு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நார்வேயின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிரெண்டே, WEF-ஐ உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக மாற்றியவர்.
இவரின் ராஜினாமா அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவல்களுக்குப் பிறகு நடந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன்-ஐ போர்ஜ் பிரெண்டே சுமார் மூன்று முறை சந்திந்து பிஸ்னஸ் டின்னர் மேற்கொண்டதாகவும், இருவர்கள் மத்தியில் மின்னஞ்சல் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்கள் பரிமாற்றப்பட்டதாகவும் தெரிய வந்தது.
இதனால் WEF நிர்வாக அமைப்பு தனிப்பட்ட விசாரணை ஒன்றை தொடங்கியது. இந்த விசாரணை முடிந்த பிறகு, WEF இணைத் தலைவர்கள் ஆண்ட்ரே ஹாஃப்மேன் மற்றும் லாரி ஃபிங்க் அறிக்கை வெளியிட்டனர். விசாரணை முடிந்துவிட்டதாகவும், அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினர்.
எப்ஸ்டீன் விவகாரம் 2019இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல உலக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போது போர்ஜ் பிரெண்டேவின் தொடர்பு வெளியானதால் WEF நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. ராஜினாமா அறிவிப்பில் எப்ஸ்டீன் குறிப்பிடப்படவில்லை என்றாலும், விசாரணைக்கு சில வாரங்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளதால், இது தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.
கேட்ஸ் ஃபவுண்டேஷன் போலவே WEF-ஐயும் பலர் நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். இந்த சர்ச்சை, WEF அமைப்பின் நம்பகத்தன்மையை பாதிக்கலாம். டாவோஸ் உச்சி மாநாடு உலக தலைவர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வு. இதுபோன்ற சர்ச்சைகள் அமைப்பின் செல்வாக்கை குறைக்கலாம். போர்ஜே பிரெண்டே ராஜினாமா செய்ததால் WEF-க்கு புதிய தலைமை தேவைப்படுகிறது.
மொத்தத்தில், போர்ஜே பிரெண்டேவின் ராஜினாமா WEF-இன் நற்பெயரை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது. எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications