உடல் எடை குறைப்பு மருந்துக்கான சந்தையாகிறதா இந்தியா? 4 மாதங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனை!!

இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதனை சார்ந்து எழக்கூடிய நீரிழிவு ,இதய சம்பந்தப்பட்ட நோய்களின் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இனம் தலைமுறையினர் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் உடல் பருமன் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது . இது நாட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்தானது.

உடல் பருமன்: மக்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது . இதனிடையே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடை குறைப்பு மருந்துகளை விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. தற்போதைக்கு அரசு 2 உடல் எடை குறைப்பு ஊசிகளுக்கு இந்தியாவில் அனுமதி தந்திருக்கிறது.

உடல் எடை குறைப்பு மருந்துக்கான சந்தையாகிறதா இந்தியா? 4 மாதங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனை!!

2 மருந்துகளுக்கு அனுமதி: நோவோ நார்டிஸ்கின் வெகோவி (wegovy) மற்றும் அமெரிக்காவின் எலி லில்லி நிறுவனத்தின் மௌஞ்சாரா (Mounjaro)ஆகிய இரண்டு எடை குறைப்பு ஊசிகளும் இந்திய சந்தையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஊசி அடிப்படையில் இந்த மருந்துகளை உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அரசு கூறுகிறது.

ரூ.100 கோடிக்கு விற்பனை: இதில் மௌஞ்சாரோ மருந்து கடந்த மார்ச் மாத இறுதியில் தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் 4 மாதங்களிலேயே இதன் விற்பனை அளவு 100 கோடி ரூபாயை கடந்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 47 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. பார்மா ட்ராக் என்ற தளம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விவரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் மௌஞ்சாரோ மருந்து விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறதாம்.

உடல் எடை குறைப்பு மருந்துக்கான சந்தையாகிறதா இந்தியா? 4 மாதங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனை!!

உடல் எடை குறைப்பு மருந்து: இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் உடல் எடை குறைப்பு மருந்து என்ற பெருமை மௌஞ்சாரோவுக்கு கிடைத்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் வரும் மார்ச் மாதத்திற்குள் மௌஞ்சாரோ மருந்து விற்பனை 500 கோடி ரூபாயை கடக்கும் என கணிக்கப்படுகிறது. அதே வேளையில் வெகோவி மருந்து ஜூன் மாதத்தில் தான் விற்பனைக்கு வந்தது. முதல் இரண்டு மாதத்தில் இந்த மருந்து 10 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

என்ன காரணம்: இந்தியாவில் உடல் எடை குறைப்பு சந்தை எவ்வளவு பெரியது என்பதை இந்த மருந்துகளின் விற்பனை அளவு நமக்கு காட்டுகிறது. மௌஞ்சாரோவை பொறுத்தவரை அதன் உடல் எடை குறைப்பு திறன் 20- 22% ஆக இருக்கிறது என மும்பை மருத்துவர் ஷிவானே தெரிவிக்கிறார். வெகோவியை பொறுத்தவரை அதன் எடை குறைப்பு திறன் 18%ஆக இருக்கிறது என கூறுகிறார்.

உடல் எடை குறைப்பு மருந்துக்கான சந்தையாகிறதா இந்தியா? 4 மாதங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனை!!

எவ்வளவு செலவு: இந்திய சந்தையை பொறுத்தவரை மௌஞ்சாரோ மருந்து ஒரு மாதத்திற்கு 4 டோஸ்கள் என ஊசி முறையில் செலுத்த வேண்டும். 2எம்ஜி மருந்துக்கு ஒரு மாதத்திற்கு 14,000 ரூபாயும் 5 எம்ஜி மருந்துக்கு ஒரு மாதத்திற்கு 17,500 ரூபாயும் செலவிட வேண்டும். அதுவே வெகோவியை பொறுத்தவரை ஒரு மாதத்திற்கு 17,000 ரூபாயிலிருந்து 26 ,000 ரூபாய் வரை செலவிட வேண்டும்.

விலை குறையுமா: மௌஞ்சாரோ விலை குறைவு, உடல் எடை குறைப்பு திறன் அதிகம் இந்திய சந்தையில் முதலிலேயே கால் பதித்து விட்டது என்பதால் அதன் விற்பனை அளவு அதிகமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்திய நிறுவனங்களை இந்த வகையிலான மருந்துகளை விற்பனை செய்ய தொடங்கிவிடும் என்பதால் அடுத்த ஆண்டு முதல் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+