உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!!

இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு ஏற்ப உடல் பருமன் மருந்துக்கான சந்தையாகவும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.

நோவா நார்டிஸ்க் நிறுவனம் வெகோவி என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும், எலி லில்லி நிறுவனம் மௌஞ்சாரா என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும் கடந்த ஏப்ரலில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. எதிர்பார்த்ததை விட இந்த மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. நீரிழிவு நோய், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள், உடல் எடை குறையாமல் தவிப்பவர்களுக்கு மருத்துவர்கள் இந்த ஊசியை பரிந்துரை செய்கிறார்கள்.

உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!!

உடல் பருமன் பிரச்சினை இருப்பவர்களுக்கு சீரான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. மாதத்திற்கு நான்கு முறை என வெவ்வேறு டோஸ்களில் இது விற்கப்படுகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டுமே நோயாளிகள் இதனை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது நோவோ நார்டிஸ்க், எலி லில்லி மட்டுமே உடல் எடை குறைப்பு ஊசிகளை விற்பனை செய்யப்படக்கூடிய நிலையில் கூடிய விரைவில் இந்தியாவை சேர்ந்த ஜெனரிக் நிறுவனங்களும் எடை குறைப்பு ஊசிகளை விற்பனைக்கு கொண்டு வர உள்ளன.

டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, சன் பார்மா போன்ற நிறுவனங்கள் வெகோவி மற்றும் மௌஞ்சாரோவை விட குறைந்த விலைக்கு இந்த மருந்துகளை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இந்த சூழலில் நோவோ நார்டிஸ்க் நிறுவனம் தடாலடியாக வெகோவி விலையை சுமார் 40 சதவீதம் வரை விலை குறைத்துள்ளது.

இது தவிர ஒசம்பிக் என்ற ஒரு புதிய மருந்தையும் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது நோவோ நார்டிஸ்க். இது வெகோவியை விட 10 சதவீதம் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது. தற்போது வெகோவியின் குறைந்த டோஸ் கொண்ட மருந்து ஒரு மாதத்திற்கு 10,850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மருந்து ஒரு மாதத்திற்கு 4 முறை செலுத்தி கொள்ள கூடியது.

நோவோ நார்டிஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஜெனரிக் மருந்து நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு டோஸ் மருந்தினை 7000 ரூபாய் என்ற விலைக்குள் கொண்டு வர முடிவு செய்த நிலையில் , வெகோவியின் விலை குறைப்பால் 5000 ரூபாய்க்குள் என விலையை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் சந்தையில் நீடிக்க முடியாது.

ஜெனரிக் நிறுவனங்களின் உடல் எடை குறைப்பு மருந்துகள் விற்பனைக்கு வரும் போது நோவோ நார்டிஸ்க் மேலும் விலையை குறைக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்திய சந்தையை லாபம் தர கூடிய நீண்ட கால தொழிலை தர கூடியதாக இருப்பதால் தொடக்கத்தில் பெரிய லாபம் பார்க்காமல் சந்தையை பிடிப்பதில் தான் இந்த நிறுவனங்கள் கவனம் செலுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+