பிரபல கோடீஸ்வரர்களான மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, எலான் மஸ்க், டிம் குக் போன்றவர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
மார்க் ஜுக்கர்பெர்க்: Meta நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு போர்க்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. கூரான வாள்களை வைத்து கத்தி சண்டை செய்வதில் அவருக்கு பயங்கர ஆர்வம். இதற்காக இஸ்ரேல், ஜப்பானை சேர்ந்த சிறந்த போர்க்கலை பயிற்சியாளர்களிடம் பயிற்சியை எடுத்துக் கொண்டார்.

பிரபல ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆயுதங்கள் தயாரிக்கும் நிபுணரிடமிருந்து சூப்பரான கூர்வாள் ஒன்றை மார்க் ஜுக்கர்பெர்க்கே தயாரித்தார்.இந்த தயாரிப்பை விடியோ எடுத்து சமூக தளங்களில் அவர் பகிர்ந்து கொண்டார். இது தவிர அவருக்கு கிட்டார் வாத்தியத்தை இசைக்கப் பிடிக்கும்.
சுந்தர் பிச்சை: சுந்தர் பிச்சை ஒரு கால்பந்து பிரியர். பார்சிலோனா புட் பால் கிளப்பின் தீவிர ரசிகர். ஒருமுறை அவர் பார்சிலோனா புட்பால் கிளப்பின் வீரர்களோடு சேர்ந்து ஏராளனமான புகைப்படங்களை எடுத்து சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டார். அவரிடம் எப்போதும் பார்சிலோனா புட்பால் கிளப்பின் அதிகாரப்பூர்வ ஜெர்ஸி கைவசம் இருக்கும். அதை அணிவதில் அவர் எப்போதும் மகிழ்ச்சி அடைவார்.
எலான் மஸ்க்: எலான் மஸ்க்குக்கு கேம்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவருக்கு ஹிப்னாடிசம், மேஜிக் செய்வதிலும் சிறு வயது முதலே நிறைய ஆர்வம் இருந்தது. இதையடுத்து ஹிப்னாடிசம் கற்றுக் கொண்ட எலான் மஸ்க் தனது தங்கையை ஹிப்னாடிசம் மூலம் அவரை ஒரு நாய் என்று நினைக்கச் செய்து பச்சையாக பன்றிக்கறியை சாப்பிட வைத்தாராம்.
டிம் குக்: ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓவான டிம் குக்குக்கு சைக்கிளிங், மலையேற்றம் போன்ற சாகசங்கள் செய்வதில் நிறைய ஆர்வம் உள்ளது. ஓய்வு கிடைத்துவிட்டால் போதும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஏதாவது மலையில் ஏறத் தொடங்கி விடுவார்.
இதுமட்டுமல்லாமல் அவருக்கு சயின்ஸ் பிக்ஷன் புத்தகங்களைப் பிடிக்கும். இது தவிர வாழ்க்கை வரலாறு, ஃபேன்டஸி நாவல்களும் பிடிக்கும். அவரது நூலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்களை டிம் குக் வைத்திருக்கிறார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications