அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வங்கியான வெல்ஸ் ஃபார்கோ அண்மையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அவர்கள் பணிபுரிவது போல தங்களது கம்ப்யூட்டர் கீபோர்டை மாற்றியமைத்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெல்ஸ் ஃபார்கோ வங்கி தனது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்கும வசதியை அளித்திருந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்த்தார்களா அல்லது அலுவலகத்தில் பணியாற்றினார்களா என்ற விவரம் தெரியவில்லை.

வங்கியின் சொத்துகள் மற்றும் முதலீடு நிர்வாகப் பிரிவில் அவர்கள் வேலை செய்தனர்.
இதனிடையே 2022இன் தொடக்கத்தில் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கஸ்டமர்களை சந்திக்கும் பணியில் இருப்பவர்கள் எல்லாரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுமாறு பணிக்கப்பட்டனர்.
வெல்ஸ் ஃபார்கோ வங்கி ஊழியர்கள் பணித் தரத்தில் உயர்ந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதாகவும் எந்தவொரு ஒழுங்கீனத்தையும் ஏற்க முடியாது என்றும் வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கீபோர்டுகளை சிமுலேட் செய்து அவர்கள் வேலைபார்ப்பது போல ஜோடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அலுவலகத்துக்கு வராமல் வேறு இடத்தில் இருந்து பணியாற்றும் வசதியைத் தந்தால் சில ஊழியர்கள் இதுபோன்று மோசடியில் ஈடுபடுகின்றனர். பல நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பத்தை வைத்து தங்களது ஊழியர்கள் முறையாக வேலைபார்க்கின்றனரா என்பதை கண்காணித்து வருகின்றனர். கோவிட் தொற்றுக்காலம் தொடங்கியதிலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த கண்காணிப்பு முறை மூலமாக ஊழியர்களை ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கச் சொல்வது, கீபோர்டு ஸ்ட்ரோக்குகளை பதிவு செய்தல், கண் விழி அசைதலை பதிவு செய்தல் போன்றவற்றின் மூலம் அவர்கள் வேலை செய்கின்றனரா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆனாலும் இந்த நடைமுறையை மீறுவதற்கு இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. மவுஸ் ஜிக்லர்ஸ் என்ற டெக்னாலஜி மூலம் தங்களது கம்ப்யூட்டர்கள் பயனில் இருப்பது போன்ற தோற்றத்தை ஊழியர்கள் ஏற்படுத்தலாம்.
அதுபோல் நம்பி வெல்ஸ் ஃபார்கோ வங்கி இந்த ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் சலுகை அளித்தும் அவர்கள் மோசடி செய்ததால் பணி நீக்கம் செய்துள்ளது.
Story written by: Jayachandran
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications