டெல்லி: பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர் தீப் சிங் பூரி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் வருத்தம் அடையவில்லை என சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காமல், வளைகுடா நாடுகளில் இருந்து அதிக எண்ணெய் வாங்கினால், அது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி இருக்கும் என சுட்டிக் காட்டியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைகளுக்கு இடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க கூடாது என தடை விதித்தன. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன.
பெரும் அதிருப்தி
இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா ரஷ்யாவினை தவிர்த்து மற்ற நாடுகளிடம் வாங்கியிருக்கும்பட்சத்தில் அது மேற்கோண்டு விலையை உயர்த்தி இருக்கலாம் என கூறியிருப்பதும், ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
கடந்த ஆண்டில் இருந்தே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி வருகின்றது. இன்றும் ரஷ்யாவிடம் இருந்தே மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது. இது குறைந்த விலையில் வாங்கி வருவது ஹைலைட்டான ஒரு விஷயமாக இருந்து வருகின்றது.
கட்டாயம் வாங்குவோம்
கடந்த ஆண்டே கச்சா எண்ணெய் வாங்காதீர்கள் என எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை. எங்கள் மக்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க வேண்டிய இந்திய அரசின் கடமை. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.
இனியும் அதிகரிக்கலாம்
இந்தியாவினை விட மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்து வந்த ஐரோப்பிய நாடுகள் கூட, ரஷ்யாவை விடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை குறைக்க ஆரம்பித்துள்ளன.
எனினும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்த நிலை இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications