சர்வதேச பார்மா துறையில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் அதிகம், சீனாவில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலக நாடுகள் வாங்குவதை விடவும், உலக நாடுகளில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்களைச் சப்ளை செய்வதில் சீனா தான் கிங்.
இந்த நிலையில் சர்வதேச மருந்து தயாரிப்பாளர்கள் சீன ஒப்பந்ததாரர்களை நம்பியிருக்கும் நிலையைக் குறைக்க முடிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக மருத்துவச் சோதனை கட்டம் (clinical trials) மற்றும் புதிய மருந்துகளின் துவக்க நிலை தயாரிப்புகளை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்கள், சீனாவில் இருந்து உற்பத்தி பொருட்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தொழிற்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மருத்துவத் துறை ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்குக் கடந்த 20 வருடமாக விருப்ப இடமாக இருந்தது சீனா, இதற்கு முக்கியமான காரணம் சீனாவில் மருத்துவ உற்பத்தி பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் சப்ளை செய்வதும், மருந்து உற்பத்தியாளர்களுக்கு வேகமாக சப்ளை செய்வதும் தான்.
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி காலத்தில் சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகப் போர் காலத்திலும் சரி, கொரோனா தொற்றுக் காலத்தில் சர்வதேச அளவில் சப்ளை செயின் பாதிப்பு அடைந்த வேளையிலும் சரி சீனாவின் மருந்து உற்பத்தி பொருட்களின் விநியோகம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வலிமையாக இருந்தது.
ஆனால் இப்போது சீனா - தைவான் பிரச்சனை, சீனா - ரஷ்யா நெருக்கம், ஆகியவை மேற்கத்திய நாடுகளின் அரசுகள் சீனா மீதான கண்ணோட்டத்தை மாற்றும் காரணமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு இந்தியாவுக்குத் தாவியது போல் இப்போது பார்மா துறைக்கும் இந்தியாவுக்கு தாவ துவங்கியுள்ளது.
மேலும் பல மேற்கத்திய நாடுகள் தத்தம் நாடுகளின் மருந்து உற்பத்தியாளர்களிடம் சீனா-வை அதிகம் நம்பியிருக்கும் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள் எனவும் மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளது. இதனால் சீன மருந்து உற்பத்திகள் மீது புதிய கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் வாயிலாகச் சில சர்வதேச பயோடெக் நிறுவனங்கள் இந்திய உற்பத்தியாளர்களிடம் API பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளனர். இந்தியாவில் இருக்கும் சைன்ஜீன், ஆர்ஜென் லைப் சையின்ஸ், பிராமல் பார்மா சொல்யூஷன்ஸ், சாய் லைப் சையின்ஸ் ஆகியவை இந்த வருடம் அதிகப்படியான Request-கள் மேற்கத்திய நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் சீனாவின் தயாரிப்புகளின் வெளிநாட்டு இறக்குமதிக்கு அதிகப்படியான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவின் contract development and manufacturing organisations (CDMOs) பிரிவின் வருவாய் தற்போது 15.6 பில்லியன் டாலராக இருக்கும் வேளையில் சீனாவின் CDMOs வருவாய் 27.1 பில்லியன் டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications