இந்திய ஊழியர்களின் வேலைப் பளு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் புலம்பி வரும் நிலையில், மிகவும் சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களின் வொர்க் லைப் பேலென்ஸ் குறித்து அக்கறை காட்டி வருகிறது.
சமீபத்தில் ஈகாமர்ஸ் நிறுவனமான மீஷோ தனது தள்ளுபடி விற்பனையை முடித்து விட்டு ஊழியர்களுக்கு 11 நாள் விடுமுறையை 2வது ஆண்டாக அறிவித்துள்ளது. இது அனைத்து இந்திய ஊழியர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது WeWork முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
WeWork நிறுவனம்
உலகின் மிகப்பெரிய கோவொர்கிங் ஸ்பேஸ் நிறுவனமான திகழும் WeWork நிறுவனம், இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஆண்டுத் தீபாவளி பண்டிகையைப் பெரிய அளவில் கொண்டாடவும், இதேபோல் ஊழியர்கள் வொர்க் லைப் பேலென்ஸ்-ஐ மேம்படுத்தவும் 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை
இந்தத் தீபாவளி பண்டிகையில் ஊழியர்கள் தங்களின் வேலையில் இருந்து பிரேக் எடுக்கவும், குடும்பத்துடன் சிறப்பாக நேரத்தைச் செலவிடவும் வகையில் தீபாவளி விடுமுறையை 10 நாள் ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் relax மற்றும் re-energise செய்ய முடியும் என WeWork நிறுவனத்தின் தலைமை மக்கள் மற்றும் கலாச்சாரத் தலைவர் பிரித்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
10 நாள் விடுமுறை
நியூயார்க் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் WeWork நிறுவனம் கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் 10 நாள் விடுமுறை அளித்தது. மேலும் இந்த ஆண்டு நிறுவனத்திற்கான முக்கியப் பென்ச்மார்க் அளவுகள் தாண்டிய நிலையில் ஊழியர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
14 பில்லியன் டாலர் இழப்பு
ஊழியர்கள் மத்தியிலான மோசமான மனநலம் இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 14 பில்லியன் டாலர் அளவிலான தொகை கூடுதலாகச் செலவாகிறது என்று டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.
டெலாய்ட் ஆய்வு
சுமார் 4,000 தொழிலாளர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் நிறுவனத்தின் ஊழியர்களின் மோசமான மனநிலை காரணமாக லீவ் எடுப்பது, நிறுவனத்தை விட்டு முக்கியமான கட்டத்தில் வெளியேறுவது, இன்னும் பல காரணங்களால் நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறது என டெலாய்ட் நிறுவன ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications