ஒரு ஆபீஸ் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மொத்தமாக உடைத்து பல நிறுவனங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் செயல்படலாம், ஐடியா ஷேர் செய்துகொள்ளலாம், ஊழியர்கள் மத்தியில் போட்டியைத் தாண்டி ஒன்றாக இணைந்து பணியாற்றும் புதிய கலாச்சாரம் எனக் கார்பரேட் கட்டுப்பாடுகளை உடைத்தது மட்டும் அல்லாமல்..
பல ஆண்டுகளாக அமெரிக்க ஆஃபீஸ் ரியல் எஸ்டேட் துறையில் சில நிறுவனங்கள், சில குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த நிலையில் இதை உடைத்து இத்துறை டீசென்ட்ரலைஸ்டு முறைக்கு மாற்றிய பெருமை WeWork நிறுவனத்தையே சாரும்.

WeWork துவங்கிய வேகத்தில் காட்டுத்தீ போலப் பரவியது மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பக்கபலமாக உயர்ந்தது. ஆனால் லாபம், அதீத கடன் ஆகியவை WeWork நிறுவனத்தைக் குழியில் தள்ளியது மட்டும் அல்லாமல் தற்போது திவாலாக்கியுள்ளது.
ஜப்பான் SoftBank குழுமத்தின் பெரும் முதலீட்டில் இயங்கும் WeWork நிறுவனத்தின் தடாலடி உயர்வும், வீழ்ச்சியும் உலகளவில் அலுவலகத் துறையைப் புரட்டிப்போட்டு உள்ளது. இந்த நிலையில் அதீத கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருந்த வீவொர்க் திங்கட்கிழமை அமெரிக்காவில் திவாலானதாக அறிவித்துத் திவால் நிலையின் பாதுகாப்பை நாடி சேப்டர் 11 அறிக்கை நியூ ஜெர்சி-ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
வீவொர்க் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 74 சதவீதம் அதன் அலுவலகக் குத்தகைக்கு மட்டுமே அளிக்கிறது. Adam Neumann துவங்கிய வீவொர்க் நிறுவனத்தில் லாபம் மற்றும் அவருடைய நடவடிக்கை பிரச்சனை காரணமாக நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 2020ல் ரியல் எஸ்டேட் வல்லுனரான Sandeep Mathrani சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
வீவொர்க் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 74 சதவீதம் அதன் அலுவலகக் குத்தகைக்கு மட்டுமே அளிக்கிறது. Adam Neumann துவங்கிய வீவொகர்க் நிறுவனத்தில் லாபம் மற்றும் அவருடைய நடவடிக்கை பிரச்சனை காரணமாக நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 2020ல் ரியல் எஸ்டேட் வல்லுனரான Sandeep Mathrani சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் 47 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட நிறுவனம் தற்போது வெறும் 44 மில்லியனாகக் குறைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications