வீ வொர்க் வணிக ரீதியிலான அலுவலக இடங்களை, ஐடி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும்.
ஸ்டார்ட் அப் நிறுவனமான இது பல லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடத்தை நிர்வகித்து வருகிறார்களாம்.
ஜப்பானின் சாப்ட் பேங்க் குழுமத்தின் உயர்மட்ட பங்குதாரர்கள் வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தை மேம்படுத்த, சுமார் 2,400 பேரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
செலவினைக் குறைக்க திட்டம்
கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கும் மத்தியில், இந்த நிறுவனம் செலவினங்களை குறைக்க இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இதன் மூலம் தனது வணிகத்தை தொடர்ந்து நிலை நிறுத்த முடியும் எனவும் வீவொர்க் நம்புகிறது. மேலும் 9.5 பில்லியன் டாலர் உயிர் நாடியை வழங்கும் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான சாப்ட் பேங்க் குரூப் கார்ப்பரேஷன் செய்யப் போகும் இந்த பணி நீக்கம், மிகப்பெரிய நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
வணிகம் மீது முழுக்கவனம்
இந்த வீவொர்க் விரைவில் அதற்கு சொந்தமான பங்குகளை 80 சதவிகித பங்குகளை சாப்ட் பேங்குக்கு சொந்தமாக்கும் நிலையில், வீவொர்க் அதன் வணிகம் மீது முழுக் கவனம் செலுத்துதை உறுதி செய்கிறது. மேலும் பணம் சம்பாதிக்கவும் இது முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை சீரமைக்கவும், வணிகத்தை புதுபிக்கவும் வீவொர்க் இப்படி சீர்திருத்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
தெளிவான பாதை இல்லை
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் நியூமனின் கீழ் வீவொர்க் செயலிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் பள்ளி அமைத்தல் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை இயக்குதல் உட்பட அனைத்து வகையான பகுதிகளுக்கும் பன்முகப்படுத்திக் கொண்டிருந்தது. மேலும் லாபத்திற்கான தெளிவான பாதை இல்லாமல் இது விரிவடைந்து கொண்டிருந்தது.
நிறுவனத்தை சீரமைக்க வழி
இந்த நிலையில் வீவொர்க் வணிகத்தில் எங்கள் புதுபிக்கப்பட்ட கவனத்தின் ஒரு பகுதியா, நாங்கள் முன்பு ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டதை போல நிறுவனம் திறமையான அமைப்பை உருவாக்க தேவையான பணி நீக்கங்களை செய்து வருகிறது. என்று இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உலகளவில் பாதிப்பு
இந்த பணி நீக்கமானது உலகளவில் 2,400 ஊழியர்களை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் அவர்கள் தொடர்ச்சியான சில நன்மைகள் மற்றும் தொழில் மாற்றத்திற்கு உதவுவதற்காக பிற வகையான உதவிகளைப் பெறுவார்கள் என்றும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கூறியது குறிப்பிடத்தக்கது.
பணி நீக்கம் இந்த வாரத்தில் இருந்தே தொடக்கம்
கடந்த ஜூன் 30ம் தேதி அன்று இந்த நிறுவனத்தில் 12,500 ஊழியர்கள் இருந்துள்ளனர். இது தவிர இதன் துணை நிறுவனங்களுக்காக பணி புரிபவர்களும் உண்டு. இந்த நிலையில் இந்த பணி நீக்கமானது இந்த வாரத்திலிருந்தே உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இந்த வாரம் இது தொடங்கியுள்ளதாக வீவொர்க் கூறியுள்ளது.
அலுவலகம் முழுவதும் சுற்றி வளைப்பு
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்ற மின்னஞ்சல் ஒரு ஊழியருக்கு அனுப்பட்ட நிலையில், அனைத்து ஊழியர்களும், இந்த நிறுவனம் உள்ள இரண்டாவது தளம் முழுவது சுற்றி வளைக்கப்பட்டதாகவும் இதன் முன்னாள் ஊழியர் தரப்பில் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பணி நீக்கம் குறித்தான அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகி கொண்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மனதில், இது ஒரு சல சலப்பை உருவாக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications