சென்னை: சர்வதேச அளவில் அலுவலக கட்டமைப்பையே மாற்றி அமைத்த WeWork நிறுவனம் சென்னை கிண்டியில் 1.3 லட்சம் சதுர அடி பரப்பிலான அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு நிறுவனம் நடத்துவதற்கு தேவையான அலுவலக வசதிகளை ஏற்படுத்தி தரக்கூடியது தான் வீவொர்க் (WeWork) நிறுவனம்.
ஐடி நிறுவனங்களில் தொடங்கி ஒரே இடத்தில் பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலை செய்வதற்கு பணியிடங்களையும், வசதிகளையும் அமைத்து குத்தகை விடுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீவொர்க், முதன்முறையாக சென்னை அலுவலக சந்தையிலும் கால்பதித்துள்ளது.

ஜூன்13ஆம் தேதி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை கிண்டியில் ஒலிம்பியா சைபர்ஸ்பேஸை நிறுவி இருப்பதாக அறிவித்துள்ளது. இரண்டு தளங்களில் 1.3 லட்சம் சதுர அடியில் 2,000 பேர் அமர்ந்து வேலை பார்க்கும் வகையில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் வீவொர்க் நிறுவனத்தின் செயல்பாடுகள் 8 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளன. சென்னை ஒலிம்பியா அலுவலகம், இந்தியாவில் வீவொர்க் நிறுவனத்தின் 55ஆவது அலுவலகமாகும்.
சென்னை வலுவான தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் உற்பத்தி துறைகளை கொண்டிருப்பதாகவும் பல்வேறு துறைகளில் சென்னையின் வளர்ச்சி பாசிட்டிவ்வாக இருப்பதாகவும் வீவொர்க் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் விர்வாணி தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் பல்வேறு நிறுவனங்களுடன் தங்களது பிராண்ட் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை இந்தியாவில் ஒரு முக்கிய அலுவலக சந்தையாக வளர்ந்து வருவது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சொத்து ஆலோசனை நிறுவனமான Savills வெளியிட்ட ஆய்வறிக்கை அடிப்படை சென்னையை பல நிறுவனங்கள் படையெடுத்து வருவதாகவும், சென்னையில் அலுவலகங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இது 31% வளர்ச்சி அடைந்து வருகிறது, சென்னையில் கோ-வொர்கிங் ஸ்பேஸ்கள் என்பது மொத்த வணிக ரியல் எஸ்டேட்டில் 20 % ஆக்கிரமித்துள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஃப்ரீலான்சர்கள், தொழில் முனைவோர், நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் வளர்ந்து வரும் வணிக நிலப்பரப்பாக சென்னை உருவெடுத்துள்ளது என வீவொர்க் இந்தியா தெரிவித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை தங்களது தொழிலை வளர்ப்பதற்கு தேவையான சாதகமான சூழல் சென்னையில் நிலவுவதாகவும் கூறியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வீவொர்க் நிறுவனம் இந்தியாவிலும் நுழைந்தது. அதிலிருந்து தற்போது வரை 55 இடங்களில் இந்த நிறுவனம் அலுவலகங்களை நிறுவி குத்தகைக்கு தருகிறது. டெல்லி, குருகிராம், நொய்டா, மும்பை, பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் தற்போது சென்னை என இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவாக்கம் அடைந்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications