தமிழ்நாட்டில் சென்னையை மட்டுமே குறிவைத்து முதலீட்டை ஈர்க்காமல் மாநிலத்தின் பிற பகுதிகளையும் முன்னிறுத்தி முதலீட்டையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது வர்த்தகம், உற்பத்தி தளம், அலுவலகம் என பலவற்றை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு மாற்றி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான Wex தனது ஆப்ஷோர் டெவலப்மென்ட் சென்டரை புதிதாக சென்னை மற்றும் மதுரையில் திறந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் Wex நிறுவனம் தற்போது அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேரக்க திட்டமிட்டு தனது டெக் அணிகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

Wex நிறுவனம் மதுரையில் தனது புதிய அலுவலகத்தை தயா சைபர் பார்க்-ல் திறந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வாயிலாக அடுத்த சில வருடத்தில் குறைந்தது 500 பேருக்கு சென்னை மற்றும் மதுரை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க கூடும்.
இதேபோல் தமிழ்நாடு அரசின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி முதலீடு 43000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தமிழ்நாட்டை EV Hub ஆக மாற்றும் முயற்சியில் அடுத்த 5 வருடத்தில் இத்துறையில் 6 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்து சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதோடு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளை குளோபல் EV HUB ஆக மாற்ற இப்பகுதிகளில் முதலீடு ஈர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் கோயம்புத்தூரில் சமீபத்தில் திறந்த லூலூ மாலில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக வீடியோ, போட்டோ அடுத்தடுத்து சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சி இன்ஜின்-க்கு லூலூ மால் கூடுதல் சக்தியை கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிலும், நிர்வாகத்திலும் இந்திாயாவில் இயங்கி வரும் வெளிநாட்டு காஃபி பிராண்டான ஸ்டார்பக்ஸ் இந்தியாவின் பெரு நகரங்களில் தனது கடைகளை திறந்துள்ள நிலையில் தற்போது கோயம்புத்தூரில் முதல் கடையை திறக்க உள்ளது.
ஸ்டார்பக்ஸ் கோயம்புத்தூரில் முதல் கிளையை தற்போது லட்சுமி மில்ஸ் வளாகத்தில் திறக்கப்பட்டு உள்ள லூலூ மால் அமைந்துள்ள பகுதியிலேயே திறக்கப்பட உள்ளது. இதேபோல் கோயம்புத்தூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட பார்வே மாலிலும் ஸ்டார்பக்ஸ் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications