இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் பெரும் பகுதி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றிய காரணத்தால், கொரோனாவுக்கு பின்பு நிறுவனங்கள் அழைத்தாலும் அலுவலகம் வர மறுப்பு தெரிவித்தனர். இதனால் அனைத்து நிறுவனங்களும் ஹைப்ரிட் வொர்க் முறையை கொண்டு வந்து வாரத்திற்கு 2 நாள் அலுவலகத்திற்கு வருவதை கட்டாயமாக்கியது.
முதலில் ஊழியர்கள் அலுவலகம் வர தயக்கம் காட்டினாலும் சில மாதங்களில் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. சமீபத்தில் லின்கிடுஇன் நிறுவனம் செய்த ஆய்வில் 78 சதவீதம் பேர் அதாவது 10ல் 8 பேர் அலுவலகம் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முக்கியமாக அவர்கள் சொல்லும் காரணம் சக ஊழியர்களிடம் பேசி பழகுவது கரியரில் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்கள். அதிலும் முக்கியமாக உயர் அதிகாரிகள் உடன்.
இது மட்டும் அல்லாமல் கார்ப்பரேட் உலகில் தற்போது பல விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது. இதை நீங்கள கேள்விப்பட்டு இருக்கீங்களா..?
Desk Bombing
நீண்ட இடைவெளிக்கு பின்பு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் வேளையில், சக ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பிறரின் டெஸ்க்-கிற்கு சென்று பேசுவது புதிய டிரெண்டாகியுள்ளது. அதிலும் குறிப்பாக உயர் அதிகாரிகள் இதை அதிகமாக செய்யும் பட்சத்தில் பிற அதிகாரிகளும் சக ஊழியரிடம் பேசி நெருங்குவது அலுவலகத்தில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெயர் தான் Desk Bombing.
Loud Leaving
கொரோனா தொற்று காலத்தில் பெரும்பாலான ஊழியர்கள் அதிகப்படியான நேரம் பணியாற்றினார்கள், இந்த நிலையில் தற்போது அலுவலகத்திற்கு பலரும் திரும்பியுள்ள வேளையில் மேனேஜர்கள் அலுவலகத்தை விட்டு கிளம்பும் போது அனைத்து ஊழியர்களிடம் சொல்லிவிட்டு அல்லது தான் செல்வதை பிறருக்கு காட்டும் படி செல்வது வழக்கமாகியுள்ளது.
இதன் மூலம் நீங்களும் வேலையை முடித்துவிட்டு கிளம்பலாம், டேக் ரெஸ்ட் என்ற அடிப்படையில் இது பார்க்கப்படுகிறது. இதற்கு பெயர் தான் Loud Leaving.
Monk Mode
தற்போது அலுவலகத்திற்கு தொடர்ந்து வரும் பெரும்பாலான ஊழியர்கள், முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக தான். அலுவலக நேரத்தில் எவ்விதமான கவன சிதறல்கள் இருக்க கூடாது என்பதற்காக மட்டுமே அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இதை தான் Monk Mode என அழைக்கப்படுகிறது.
Career Gazing
சக ஊழியர்களிடம் தங்களுடைய ஐடியா மற்றும் பார்வை பகிர்வது பணியில் வளர்ச்சிக்கான முக்கிய பங்காக விளங்குகிறது. இது எப்போதும் நடப்பது என்றாலும் கொரோனாவுக்கு முன்பு வரையில் மிகவும் நெருக்கமானவர்கள் மத்தியில் மட்டுமே இது நடக்கும், ஆனால் தற்போது எவ்விதமான தடையும் இல்லாமல் அனைவரிடத்திலும் நடக்கிறது.
வியாழன் தான் இப்போ வெள்ளி
இந்த ஹைப்ரிட் கலாச்சாரத்தில் வியாழக்கிழமை தான் வாரத்தின் கடைசி நாளாக கருதப்படுகிறது. 79 சதவீத ஊழியர்கள் வெள்ளிகிழமை முதலே குடும்பத்துடன் அதிகப்படியான நேரம் செலவழிக்க துவங்கிவிடுகின்றனர்.
இதெல்லாம் தான் இப்போதைய டிரெண்ட், உங்கள் அலுவலகத்தில் இதில் எது இருக்கு..? கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications