உலகம் முழுவதும் அனைத்து நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. ஆனால் இன்னும் சில நிறுவனத்தில் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், இது நிர்வாகத்திற்கு வருமான பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பெரிய பிரச்சனையாக தெரிகிறது.
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் return-to-office கொள்கையை கடுமையாக பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் அலுலகம் வராத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மெட்டா ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மெட்டா நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான Lori Goler சார்பாக அனைத்து ஊழியர்களுக்கும் return-to-office கொள்கையை குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் விளக்கம் அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் யாரெல்லாம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளதோ அனைவரும் அலுவலகம் வந்து தான் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் வாடிக்கையாளர் அல்லது நிறுவனம் தொடர்பான சந்திப்பில் ஈடுப்பட வேண்டும். இவ்விரண்டிலும் இல்லாதவர்கள் கட்டாயம் வாரத்திற்கு 3 நாள் அலுவலகம் வர வேண்டும் என கண்டிப்பான விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இதை ஒவ்வொரு ஊழியர் அடிப்படையில் மாதாந்திர அடிப்படையில் நிர்வாகம் கண்காணிக்கும், மேலும் ஊழியர்கள் வருகையை அனைத்து மேனேஜர்களும் பேட்ஜ் மற்றும் ஸ்டேட்டஸ் டூலில் அப்டேட் செய்து டிராக் செய்ய வேண்டும். இந்த விதிமுறையை கடைப்படிக்காத ஊழியர்கள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
இதன் மூலம் வருகிற செப்டம்பர் 5 முதல் in-person Time Policy நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, இதன் மூலம் 3 வாரத்திற்கு குறைவான வருகை பதிவு கொண்ட ஊழியர்கள் மீது கட்டாயம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த விதிகளை தொடர்ந்து கடைபிடிக்காமல் மீறுபவர்கள் கட்டாயம் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, சரி செய்யாத பட்சத்தில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக மெட்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications