இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் அனைத்துத் துறை அலுவலகங்களும் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உற்பத்தித் துறை முழுவீச்சில் ஊழியர்களை அழைத்து 3 ஷிப்டிலும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் முதல் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகத் துறையாக விளங்கும் ஐடி துறை ஊழியர்கள் அதிகளவிலான ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.
ஐடி துறை
ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அதிகளவில் வேக்சின் பாதுகாப்பு அளித்துள்ள நிலையில் விரைவில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் பணியைத் துவங்க உள்ளது. ஆனால் அதில் பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சலுகைகள் இருப்பதாகவும் தெரிகிறது.
டிசம்பர் முதல்
தற்போது கிடைத்துள்ள தகவல் படி டிசம்பர் மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் இல்லாமல் வெறும் 3 நாட்கள் மட்டும் வந்தால் போதுமென அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
வயது வாரியாக அழைப்பு
மேலும் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் ஊழியர்கள் வயது வாரியாக அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உதாரணமாக நாட்டின் 4 முன்னணி ஐடி சேவை நிறுவனத்தில் 25 வயதுக்கும் அதிகமான ஊழியர்கள் நவம்பர் மாதத்தில் இருந்தே அலுவலகத்திற்கு லாடல் அல்லது பேட்ச் வாரியாக அழைக்கப்பட்டு உள்ளனர்.
நாஸ்காம்
இதைத் தொடர்ந்து 40 வயதுக்கும் அதிகமானவர்கள், அதன் பின்பு அடுத்த கட்ட ஊழியர்கள் வரும் மாதத்தில் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என நாஸ்காம் அறிக்கை கூறுகிறது. தற்போது அனைத்து நிறுவனம் ஹைப்ரிட் மாடலை பயன்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் ஆன்சைட் மற்றும் ஆப்சைட் ஆப்ரேட்டிங் மாடலை பெரிய அளவில் மேம்படுத்த முடியும் என நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ் தெரிவித்துள்ளார்.
ஹைப்ரிட் மாடல்
நாஸ்காம் நவம்பர் 1ஆம் தேதி செய்த ஆய்வில் இந்தியாவில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை தங்களது நிறுவனத்தில் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர்கள் பாதி நாள் அலுவலகத்திலும், மீதமுள்ள நாட்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற முடியும்.
ஐடி நிறுவனங்கள்
குறிப்பாக 1000 ஊழியர்களுக்கு அதிகமாக இருக்கும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் ஹைப்ரிட் மாடலை பயன்படுத்த உள்ளதாக நாஸ்காம் செய்த ஆய்வில் தெரிகிறது. இதன் மூலம் ஐடி ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் நிறுவனங்களுக்கும் அதிகப்படியான நன்மை கிடைக்கிறது.
டிசிஎஸ், இன்போசிஸ்
இந்நிலையில் இந்தியாவில் இரு பெரிய ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய டிசம்பர் மாதம் அதிகளவிலான ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஹைப்ரிட் மாடலை பயன்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications