மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய சிக்கல்கள், இந்திய ஐடி துறையின் செயல்பாடுகளை பாதிக்க துவங்கியுள்ளது.
ஏற்கனவே தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடிய நாட்களை குறைக்கவும், வொர்க் ப்ரம் ஹோம் ஆஃப்ஷன் அளிக்கவும் பரிந்துரை செய்து வருகின்றன.

இந்தியாவின் வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் மூத்த தலைவரும் சமீபத்தில் ஊழியர்களுக்கு Work From Home கொடுத்தால் எரிபொருள் சேமிக்கலாம், அப்படி சேமிக்கப்படும் எரிபொருளை ஹெல்த்கேர், பொதுத்துறை போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகளுக்கு திருப்பலாம் என பரிந்துரை செய்தார். இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த வாரம் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது.
குறிப்பாக ஐடி நிறுவன கேம்பஸ்-களில் செயல்படும் உணவகங்கள் மற்றும் உணவு சேவை வழங்குநர்களுக்கு தேவையான வர்த்தக LPG கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக பல பெரிய IT நிறுவனங்கள் ஊழியர்களுக்கு புதிய வேலை முறை மற்றும் உணவு ஏற்பாடுகளை அறிவித்துள்ளன.
வீட்டு LPGக்கு முன்னுரிமை
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் படி, LPG விநியோகத்தில் முதன்மையாக வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதன் விளைவாக நிறுவன கேம்பஸ்-களில் உள்ள உணவகங்கள், கேண்டீன்கள் மற்றும் உணவு சேவை வழங்குநர்கள் பயன்படுத்தும் வர்த்தக LPG சிலிண்டர் விநியோகம் குறைந்துள்ளது.
இதனால் பல IT நிறுவனங்கள் முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Zoho நிறுவனம்
எரிபொருள் தட்டுப்பாடு சூழ்நிலை காரணமாக இந்திய SaaS துறையில் முக்கிய நிறுவனமாக உள்ள Zoho, தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு இரண்டு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை (Work From Home) செய்ய அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 16 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், டேட்டா சென்டர்கள், பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் முக்கிய மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்னிசென்ட்
Cognizant நிறுவனம் தனது ஊழியர்களுக்கு உணவு தொடர்பான மாற்று ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது பாதிக்கப்படவில்லை என்றாலும், உணவு மற்றும் எரிபொருள் சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதனால் கேண்டீன் சேவைகளில் LPG பயன்படுத்தப்படும் அளவை குறைக்கும் நோக்கில் பணியாளர்கள் இயன்றவரை தாங்களே உணவை கொண்டு வருமாறு "Bring Your Own Food (BYOF)" என்ற நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் டெக்
எரிபொருள் பிரச்சினை காரணமாக LPG விநியோகம் பாதிக்கப்பட்டதால் HCLTech நிறுவனம் மார்ச் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 4 நாட்கள் ஊழியர்கள் வீட்டில் இருக்க முடியும்.
LPG விநியோகம் பிரச்சனையால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், நிறுவன கேம்பஸ்-களில் உணவக நிறுவனங்கள் வர்த்தக LPG தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஹெச்சிஎல் டெக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அளித்த ஈமெயிலில் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு தற்காலிகமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ்
Infosys நிறுவனமும் பெங்களூரு, புனே மற்றும் சென்னை போன்ற முக்கிய IT மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மார்ச் 12 முதல் நிறுவன உணவகங்களில் வழங்கப்படும் சேவைகளில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேண்டீன்களில் இயங்கும் சில நேரடி உணவு தயாரிப்பு (live food counters) சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.
எல்பிஐ தட்டுப்பாடு இந்திய ஐடி மற்றும் டெக் துறையில் வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!



Click it and Unblock the Notifications