டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழும். வரும் சனிக்கிழமை நிர்மலா சீதாராமன் 2025- 26 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்தக்கூடிய நபர்கள் பல்வேறு அறிவிப்புகள் வரவேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் நுகர்வு போக்கை அதிகரிக்கும் வகையில் அரசு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரி செலுத்தும் சுமார் எட்டு கோடி பேர் மத்திய அரசிடம் முன் வைக்கும் சில கோரிக்கைகள் என்னென்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்:
இந்தியாவில் ஆண்டுக்கு 8 கோடி பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறார்கள். இவர்களில் சுமார் 72% பேர் புதிய வரி கணக்கு நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில் பழைய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாகவும், புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது. இதனை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நிலையான வரி கழிவை உயர்த்துவது:
பழைய வரி மற்றும் புதிய வரி நடைமுறைப்படி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான வரி கழிவு வழங்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய வரி கணக்கு நடைமுறையில் நிலையான வரி கழிவு 75,000 ரூபாயாக இருக்கிறது. இதனை ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பழைய வரி நடைமுறையில் 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும் வரி கழிவை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
பிரிவு 80சி-இன் கீழ் வரி சலுகை:
பழைய வரி நடைமுறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்களுக்கு பிரிவு 80சி யின் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாற்றமடையாமலே இருக்கிறது. இந்த 1.50 லட்சம் ரூபாயை 3 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த 80சி பிரிவின் கீழ் தான் வீட்டுக் கடனுக்காக செலுத்தக்கூடிய அசல் தொகை மற்றும் பிற சேமிப்புகளை குறிப்பிட்டு நாம் வரி விலக்கு பெற முடிகிறது.
தேசிய ஓய்வூதிய திட்டம்:
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செய்யப்படும் பங்களிப்புகளுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 18சிசிடி (1பி)இன் கீழ் தனி நபர்கள் ஓர் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு பெற முடியும். இதனை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தினால் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வீட்டுக்கடனுக்கு வழங்கப்படும் வரி சலுகைகளை அதிகரிக்க வேண்டும், புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு பிரிவுகளை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் நிலவுகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications