அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர் பெயர் குறிப்பிடாமல் நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வெளிப்படைத்தன்மை என்ற இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களில் இருந்த சிக்கல் என்ன? அரசின் நோக்கம் வெற்றி பெற்றதா என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். அரசியல் கட்சிகளுக்கு தனிநபரோ அல்லது நிறுவனங்களின் பெயரிலோ ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற வாதம் எழுந்தது.
எனவே பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்த திட்டம் தான் தேர்தல் பத்திரங்கள்.
இந்திய குடிமக்கள் மற்றும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தங்களின் அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட தொகை கொண்ட தேர்தல் பத்திரங்களை வாங்க வேண்டும். இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு செல்லும் பணம் குறித்த வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது.
எங்கு கிடைக்கும்: தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே வாங்க முடியும். ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட 10 நாட்களுக்கு மட்டும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். அந்த 10 நாட்களை மத்திய அரசு அறிவிக்கும்.
எவ்வளவு நன்கொடை அளிக்கலாம்: பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளிலிருந்து 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் மற்றும் 1 கோடி ரூபாய் வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.
இந்த தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. எந்த கட்சிக்கு நன்கொடை அளிக்கப்படுகிறதோ அந்த கட்சியின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம்: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29ஏ-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நன்கொடை அளிக்க முடியும். கடந்த மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளை பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.
எந்த கட்சி அதிக நிதி பெற்றுள்ளது? அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, 2022-23ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 1,300 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளில் 61% தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது.
இதே காலகட்டத்தில் காங்கிரஸுக்கு171 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது.
தேர்தல் பத்திரம் - சர்ச்சை ஏன்?: அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள் குறித்த வெளிப்படைத்தன்மை இருந்தாலும் யார் நன்கொடை வழங்குவது என்பது ரகசியமாக இருக்கிறது. எனவே இது கருப்பு பணத்தை ஊக்குவிப்பதாக அமைகிறது என ஒரு தரப்பினர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். அதாவது தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் உள்ளிட்ட அடையாளம் இடம் பெறாததே சர்ச்சைக்கு காரணம்.
தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இதுவரை கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நிதிகளை பெற்றது என்ற விவரங்கள் மொத்தமாக வெளியே வரப்போகிறது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications