வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்கிலிருந்து அவ்வப்போது பணம் எடுக்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். இதைப் "பணப் பரிவர்த்தனைக் கட்டணம்" என்று கூறுவார்கள். பணம் டெபாசிட் செய்வது அல்லது பணம் எடுப்பது போன்றவற்றுக்கு வங்கிகள் வரம்புகளை வைத்திருக்கும். இந்த வரம்புகளை மீறி எப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாளர் பணம் எடுக்கிறாரோ? அல்லது பணம் டெபாசிட் செய்கிறாரோ? அப்போது இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படும்.
இது போன்ற விதிகளை தெரிந்து கொண்டு நடப்பது தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க உதவும். குறிப்பாக ஒவ்வொரு வங்கிக்கும் இந்த வரம்பு மாறுபடலாம். இந்தப் பதிவில் ஐசிஐசிஐ பேங்கின் பாலிசியின் படி இந்தக் கட்டணங்கள் எப்போது, ஏன் விதிக்கப்படுகிறது? என்பது குறித்து பார்ப்போம்.

நீங்கள் கணக்கு திறந்த கிளையில் பணம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கட்டணம்? இலவச வரம்பு உண்டா?: நீங்கள் கணக்கு தொடங்கிய கிளையில் பணம் டெபாசிட் செய்வதற்கு வரம்புகள் உண்டு. ஒவ்வொரு மாதமும் 3 இலவச பணம் டெபாசிட் செய்யும் வசதி மற்றும் பணம் எடுக்கும் வசதி அனுமதிக்கப்படுகிறது. இந்த இலவச வரம்பை மீறி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக நீங்கள் செய்யும் ரொக்கப் பரிவர்த்தனை ரூ. 1 லட்சத்தை தாண்டியிருந்தால் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
உதாரணமாக ஒரு மாதத்தில் ரூ. 1.5 லட்சம் ரொக்கமாக டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ரூ.1 லட்சம் வரம்பை மீறி ரூ.50,000 மீதம் இருக்கும். இந்த ரூ. 50,000-த்திற்கு, 1,000 ரூபாய்க்கு ரூ.5 என்ற வீதத்தில் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக டெபாசிட் செய்து பணப்பரிவர்த்தனை செய்தால் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்..
கணக்கு தொடங்கிய கிளை அல்லாத பிற கிளைகளில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் எவ்வளவு?: நீங்கள் கணக்கு தொடங்கிய கிளைகளில் பணம் டெபாசிட் செய்யாமல் வேறு கிளையைத் தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்தால், அதற்கும் வரம்புகள் பொருந்தும். வேறு கிளைகளில் ஒரு நாளைக்கு ரூ. 25,000த்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 5 ரூபாய் அல்லது 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படலாம். நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கின் வகையைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடலாம். ஸ்பெஷல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வெவ்வேறு வரம்புகள் மற்றும் கட்டண விலக்குகள் இருக்கலாம்.
அதேபோல உங்கள் சொந்தக் கணக்கில் ஒரு நாளைக்கு எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம், வரம்பை மீறும் பட்சத்தில் மேலே கூறப்பட்டுள்ள கட்டணங்கள் பொருந்தும். ஆனால் நீங்கள் வேறு ஒருவருக்காக பணம் டெபாசிட் செய்தால் அதற்கான தினசரி வரம்பு ரூ. 25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் எதற்காக பணம் எடுக்கப்பட்டது என்பதை தெரியாமல் சிலர் புலம்புவார்கள். எனவே உங்கள் வங்கியில் இது போன்ற கட்டணங்கள் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொண்டால் எதற்காக கட்டணம் கழிக்கப்பட்டது? என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications