பிரைவேட் கிரிப்டோகரன்சி என்றால் என்ன..? கிரிப்டோ முதலீட்டாளர்களின் குழப்பத்திற்கு பதில்..!

மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 26 மசோதாக்களில் கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மசோதா உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் வர்த்தகத் தளத்தில் கிரிப்டோகரன்சி விலை தாறுமாறாகக் குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோகரன்சி மசோதாவில் மத்திய அரசு பிரைவேட் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உண்மையில் பிரைவேட் கிரிப்டோகரன்சி என்றால் என்ன..? பிட்காயின் எதிரியம், ஷிபா இனு, டோஜ்காயின் போன்றவை இதில் வருமா..? மக்களின் முதலீட்டுக்கு எந்த வகையில் பிரைவேட் கிரிப்டோகரன்சி தடையால் பாதிப்பு ஏற்படும்..?

இந்த முக்கியமான கேள்வி அனைத்திற்கும் பதிலைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 கிரிப்டோ மசோதா

கிரிப்டோ மசோதா

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்ற பெயரில் சமர்ப்பித்துள்ள மசோதாவில் அனைத்துப் பிரைவேட் கிரிப்டோகரன்சியும் தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பிரைவேட் கிரிப்டோகரன்சி என்றால் என்ன கேள்வி தான் அனைவரிடத்திலும் உள்ளது.

 பிரைவேட் கிரிப்டோகரன்சி

பிரைவேட் கிரிப்டோகரன்சி

பிரைவேட் கிரிப்டோகரன்சி என்பது அடிப்படையில் சில தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு வித்தியாசத்தை அடிப்படியாகக் கொண்டு பிரிக்கப்படுகிறது. அடிப்படையாகவே கிரிப்டோகரன்சி வர்த்தகம் அனைத்தும் பதிவு செய்யப்படும், அதை எப்படிப் பதிவு செய்யப்படுகிறது, இதை எப்படி ஆக்சஸ் செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்தே பப்ளிக் அல்லது பிரைவேட் கிரிப்டோகரன்சி தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது.

 Distributed ledger முறை

Distributed ledger முறை

கிரிப்டோகரன்சிகள் வர்த்தகப் பரிமாற்றங்களை Distributed ledgers கீழ் சேமிக்கப்பட்டு அதன் பின் ஓரே இடத்தில் (centralised traditional ledger) சேமிக்கப்படும். இந்த Distributed ledger-ல் நெட்வொர்க் உறுப்பினர்கள் மாற்றங்களைச் செய்ய அனுமதி பெற வேண்டிய கட்டாயமும் இருக்கும் (permissioned), அதேபோல் அனுமதி தேவைப்படாத நிலையும் (permissionless) இருக்கும்.

 கிரிப்டோ நெட்வொர்க் உறுப்பினர்கள்

கிரிப்டோ நெட்வொர்க் உறுப்பினர்கள்

இப்படி Distributed ledger-ன் அனுமதி வைத்து தான் பப்ளிக் அல்லது பிரைவேட் எனப் பிரிக்கப்படுகிறது. அதாவது Distributed ledger-ஐ அந்தக் கிரிப்டோ நெட்வொர்க்-ல் இருக்கும் யார் வேண்டுமானாலும் ஆக்சஸ் செய்ய முடியுமெனில் அது பப்ளிக், இல்லையெனில் அது பிரைவேட்.

 பிளாக்செயின் தொழில்நுட்பம்

பிளாக்செயின் தொழில்நுட்பம்

அனைத்து கிரிப்டோகரன்சியும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் காரணத்தால் முழுமையான privacy இல்லை என்றாலும், சில அளவீட்டில் privacy அளிக்கிறது. இந்த வகையில்
பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பப்ளிக் கிரிப்டோகரன்சியை Distributed ledger உதவியுடன் டிராக் செய்ய முடியும், ஆனால் பிரைவேட் கிரிப்டோகரன்சியை டிராக் செய்ய முடியாமல் உரிமையாளரின் ரகசியத்தைக் காக்கப்படும்.

 பிரைவேட் கிரிப்டோகரன்சி டிரேஸ்

பிரைவேட் கிரிப்டோகரன்சி டிரேஸ்

சுருக்கமாகப் பிரைவேட் கிரிப்டோகரன்சி மூலம் பரிமாற்ற பதிவுகள் செய்யாமலே பரிமாற்றம் செய்ய முடியும், இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என நாஸ்டாக் விளக்கம் அளித்துள்ளது. இது ஒவ்வொரு நாடுகளுக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.

 Monero, Zcash, மற்றும் Dash

Monero, Zcash, மற்றும் Dash

இந்நிலையில் பிட்காயின், லைட் காயின், எதிரியம் போன்றவை பப்ளிக் கிரிப்டோகரன்சி. இதேபோல் Monero, Zcash, மற்றும் Dash ஆகியவை பிரைவேட் கிரிப்டோகரன்சி என முன்னணி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய அரசு தனது மசோதாவில் பிரைவேட் கிரிப்டோகரன்சி என்பதை டெக்னிக்கல் வழியில் குறிப்பிட்டதா அல்லது வேறு விளக்கம் வைத்துள்ளதா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

 தொடர்ந்து விற்பனை

தொடர்ந்து விற்பனை

இத்தகைய பிரைவேட் கிரிப்டோகரன்சியைத் தடை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடத்தில் இருந்து கிரிப்டோகரன்சி மதிப்பு மளமளவெனக் குறைந்து கிரிப்டோ முதலீட்டாளர்கள் பீதியில் வைத்துள்ளது. முதலீட்டாளர்கள் பயத்திலும், குழப்பத்திலும் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+