இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026-27 நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ளன. பட்ஜெட் என்றாலே வெறும் வரி விகிதங்களும், நிதி ஒதுக்கீடுகளும் மட்டும்தானா? என்றால் நிச்சயமாக இல்லை.
நார்த் பிளாக்கின் ரகசிய அறைகளில் தயாராகும் அந்த ஒரு நீல நிறத்தாள் முதல் நிதி அமைச்சரின் கையில் தவழும் நவீன பஹி காதா (Bahi Khata) வரை, இந்த பட்ஜெட்டின் பின்னால் பல தலைமுறை கால சுவாரஸ்யமான கதைகளும், அதீத ரகசியங்களும் ஒளிந்துள்ளன. அந்த டாப் 5 ஆச்சரியங்கள் இதோ உங்களுக்காக..

சூட்கேஸ் டூ பஹி காதா: காலனித்துவ காலத்து சூட்கேஸ் கலாச்சாரத்தை உடைத்து, இந்திய பாரம்பரிய சிவப்பு துணி உறையில் போர்த்தப்பட்ட டேப்லெட் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2021 முதல் இது டிஜிட்டல் பட்ஜெட்டாக மாறினாலும், அந்த பாரம்பரிய சிவப்பு உறைக்குள் இருக்கும் டேப்லெட் இன்றும் நவீன இந்தியாவை பறைசாற்றுகிறது.
ரகசிய ப்ளூ ஷீட்: பட்ஜெட்டின் ஒட்டுமொத்த சாராம்சம் அடங்கிய இந்த நீல நிற தாள்தான் மிகவும் ரகசியமானது. பட்ஜெட்டின் அனைத்து முக்கிய புள்ளி விவரங்களும் அடங்கிய இந்த நீல நிறத்தாள், நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகளால் மட்டுமே கையாளப்படும். இது ஒருபோதும் நார்த் பிளாக்கை விட்டு வெளியே வராது. ஏன், நிதியமைச்சர் கூட இதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
சென்டிமென்ட் அல்வா விழா: பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தை இனிப்புடன் தொடங்க அல்வா விழா நடத்தப்படுகிறது. அதன் பிறகு அதிகாரிகள் சுமார் 10 நாட்கள் வெளியுலகத் தொடர்பின்றி தனிமைப்படுத்தப்படுவார்கள்.
நேர மாற்றம்: பிரிட்டிஷ் காலத்து வழக்கப்படி மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், 1999-ல் இந்திய வசதிக்காக காலை 11 மணிக்கு மாற்றப்பட்டது. இது கடந்த 2017 முதல் பிப்ரவரி 1, தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதிலும் 2026ம் ஆண்டு பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுவது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம்.
சீதாராமனின் சாதனை: 2026-ல் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து, இந்தியாவின் நீண்ட கால பட்ஜெட் உரையாற்றியவர் என்ற தனது சொந்த சாதனையை தொடர்கிறார். இதன் மூலம் இந்தியாவின் நீண்ட பட்ஜெட் உரையாற்றியவர் (2 மணி 42 நிமிடங்கள் - 2020) என்ற பெருமையையும், அதிக பட்ஜெட்களை தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் ஒருவராகவும் சாதனை படைக்க உள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications