நடப்பு நவம்பர் மாதம் என்பது இன்றோடு முடிவடையவுள்ள நிலையில், நாளை டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் பல நிதி ரீதியான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.
அது என்னென்ன மாற்றங்கள்? இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பலன்? இதனால் என்ன பாதிப்பு? நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சர்வதேச சந்தையினை பொறுத்து சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். இது மட்டும் அல்ல நாளை முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. அது என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்குமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆயுள் சான்றிதழ்
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் ஆயுள் சான்றினை சமர்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை சமர்பிக்க நவம்பர் 30ம் தேதியன்று கடைசி தேதியாகும். ஆக இதற்குள் சமர்பிக்கப்படாவிட்டால், அது ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
ரயில்கள் நேரம் மாற்றம்
பொது போக்குவரத்துகளில் இன்னும் மக்கள் மத்தியில் பிரதானமாக இருப்பது ரயில் போக்கு வரத்து தான். இதில் கட்டணமும் குறைவு.அதே சமயம் நீண்டதூரம் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இது சாமானியர்கள் மத்தியில் விருப்பமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் பல ரயில்களின் நேரம் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக நீங்கள் பயணம் செய்ய நினைக்கும் முன்பு இதனை முழுமையாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது நல்லது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC அப்டேஷனை டிசம்பர் 12ம் தேதிக்குள் அப்டேட் செய்யப்பட வேண்டும். அப்படி சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால், உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே போதிய கால அவகாசத்தினை கொடுத்துள்ள நிலையில், இந்த முறை நீட்டிப்பு இருக்குமா? என்பதும் கேள்வியாக உள்ளது. இதனை ஆன்லைனிலும் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள் வங்கிக் கிளையிலும் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் தமிழக மின் நுகர்வோர் டிஎன்இபி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய பக்கத்தில் சென்று செய்யலாம். இதை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
எப்படி இணைப்பது?
இதனை உங்களது மின்சார இணைப்பு எண்ணை (Service Connection Number) பதிவிட வேண்டியிருக்கும். இதன் பிறகு ஓடிபி ஜெனரேட் செய்ய வேண்டி இருக்கும்.
அதற்கு முன்னதாக வாடிக்கையாளரின் பெயர் என்ன?? ஆதாரில் உள்ளபடி உள்ளதா? ஆதார் ஐடி என்ன? என்பதை கொடுத்து, ஆதாரினையும் அப்லோடு செய்ய வேண்டியிருக்கும். இதனை கொடுத்து சப்மிட் செய்த பிறகு அக்னாலெட்ஜ்மென்ட் ரசீதை பெறவும். அப்படி இல்லை எனில் நேரடியாக சென்றும் இணைக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31 வரையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications