சென்னை: ஒரு வீட்டு மனையோ அல்லது நிலத்தையோ வாங்கும் போது உரிமையாளர் அதன் மீதான உரிமையை மற்றவருக்கு எழுதிக் கொடுக்கிறார். அந்த வகையில் ஒரு வீட்டுமனையோ அல்லது நிலமோ வாங்கி பதிவு அலுவலகத்தில் சென்று நாம் பதிவு செய்யும்போது பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அத்துடன் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது.
இது அந்த சொத்து முறையாக ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு மாறுவதை உறுதி செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பத்திரப்பதிவின்போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் சான்றுகளை சம்பந்தப்பட்டவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அடையாள ஆவணங்கள்: சொத்தினை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதிப் பெறுபவர் ஆகியோரது புகைப்பட அடையாள அட்டையின் அசல் மற்றும் நகல்களை கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆதார் அட்டை ,பான் கார்டு ,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் , பாஸ்போர்ட் ஆகிய அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விற்பனை பத்திரம்: முதலில் சொத்தினை விற்பனை செய்யும் நபர் எழுதிக் கொடுக்கக்கூடிய அசல் ஆவணம் கட்டாயம். இதனை விற்பனை பத்திரம் என்றும் கூறலாம். அதாவது விற்பனையாளரிடமிருந்து நிலம் அல்லது வீடு மனை போன்ற சொத்து வாங்கும் போது அந்த சொத்தில் உரிமை மாறுவதை நிறுவக்கூடிய முதன்மையான ஆவணம் இதுவாகும். இதில் அந்த சொத்தின் விவரம் ,விற்பனை விலை ,சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் , அந்த இடத்தின் சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
டிமாண்ட் டிராஃப்ட்: சொத்துக்கான சரியான முத்திரை தீர்வையை டிமாண்ட் டிராஃப்டாக செலுத்த வேண்டும். இதற்கு பத்திர பதிவு அலுவலகத்திலேயே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
பட்டா மற்றும் சிட்டா: ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க கூடிய மற்றும் அந்த நிலம் அமைந்திருக்கக் கூடிய இடத்தை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களால் வழங்கப்படக்கூடிய ஆவணங்களே பட்டா மற்றும் சிட்டா என அழைக்கப்படுகிறது.
இதில் அந்த நிலத்தின் சர்வே எண், நிலத்தின் அளவு ,அந்த நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்பன போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும் , அந்த நிலம் தற்போது எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை இதில் தெரிந்து கொள்ள முடியும்.
அடங்கல்: ஒரு நிலத்தின் வகையை குறிப்பிடக்கூடிய ஆவணம் தான் இது. குறிப்பிட்ட நிலம் அமைந்திருக்கக்கூடிய பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இந்த ஆவணம் கிடைக்கும் .இதனை அடங்கல் என அழைப்பார்கள். இதில் அந்த நிலத்தின் வகைப்பாடு என்ன, நிலத்தின் பரப்பளவு என்ன ,அது விவசாய நிலமா என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.
வரைபடம்: குறிப்பிட்ட அந்த சொத்தின் வரைபடம் அல்லது நில புலப்படம் சொத்தின் எல்லைகளை சரிபார்க்க உதவக்கூடியவை. எனவே இந்த ஆவணங்களை சரி பார்ப்பது மிகவும் அவசியம்.
பான் கார்டு: சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதனை எழுதி பெறுபவரும் எழுதிக் கொடுப்பவரும் பான் கார்டு நகலை தாக்கல் செய்ய வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள் அதற்குரிய படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications