குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரேஷன் அட்டை அடிப்படையில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என ஒரு வருடத்திற்கு மொத்தமாக 12 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை: ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் பொறுத்தவரை தற்போது ஏராளமான பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பெற்றாலும் பலரும் தங்களுக்கு தகுதி இருந்தும் இந்த திட்டத்தில் பணம் கிடைக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்: அது தவிர புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி வந்தனர். இந்த சூழலில் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து, விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள பெண்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவித்திருக்கிறார்.
45 நாட்களுக்குள் முடிவு: இவ்வாறு பெண்கள் வழங்கும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்து தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம். யாரெல்லாம் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய தகுதி பெற்றவர்கள் குடும்பத் தலைவி என்பதை எதன் மூலம் தீர்மானிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
யார் குடும்பத் தலைவி:குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள அனைவருமே ஒரு குடும்பமாக கருதப்படுவார்கள். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவி கலைஞர் மகளிர் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் செய்யலாம். அதாவது குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார் அல்லது குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு அவருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
21 வயது நிரம்பியவர்: குடும்ப அட்டையில் ஒரு ஆணின் பெயர் இடம் பெற்று இருக்கிறது அவருடைய மனைவி தற்போது உயிருடன் இல்லை எனும் போது அந்த குடும்ப அட்டையில் இருக்கும் 21 வயது நிரம்பிய மற்றொரு பெண் பெயர் இருந்தால் அவர் குடும்ப தலைவியாக கருதி விண்ணப்பம் செய்யலாம். அதேபோல திருமணம் ஆகாத தனித்த பெண்கள் தங்களுக்கென தனியாக ரேஷன் அட்டை இருக்கிறது என்றால் அவர்கள் இந்த திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்ய முடியும்.
கைம்பெண்கள் , திருநங்கைகள்: கணவரை இழந்து இருக்கக்கூடிய கைம்பெண்கள் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்யலாம் , திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர் என அரசு தெரிவித்து இருக்கிறது. ஆனால் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்க முடியாது., அரசு ஊழியர்கள் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் இந்த திட்டத்தில் பலன் கிடைக்காது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications