சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு மாதம் 1000 ரூபாய் நிதி பெற முடியும். இருந்தாலும் வேறு உதவி தொகை பெறுபவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பெண்கள் கூறுகின்றனர். எந்தெந்த திட்டங்களில் உதவி தொகை பெறுபவர்கள் எல்லாம் இந்த திட்டத்திலும் விண்ணப்பித்து உரிமை தொகை பெறலாம் என்பதை பார்க்கலாம்.
ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவிகள் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

அது தவிர மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆகின்றனர்.
மேலும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களுக்கான உங்களின் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் ஒரு முறை விண்ணப்பம் செய்யலாம் அது உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பாக எடுத்துரைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறையில் விடுபட்ட பெண்களும் மாதம் 1000 ரூபாயை பெற தகுதி பெறுகின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications