சென்னை: ஒரு குழந்தை பிறந்தவுடன், அவர்களின் பெற்றோர்கள் குழந்தையின் பெயரில் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கி விடுகின்றனர். அவ்வாறு முதலீடு செய்யப்படும் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
முன்பெல்லாம் ஒரு குழந்தைக்கு முதலீடு செய்வதே அரிதாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள பெற்றோர்கள் அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நலனை பாதுகாக்க முன்கூட்டியே யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதன் விளைவாக ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து வைக்கின்றனர். வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

மேலும், சில திட்டங்களுக்கு குழந்தை பிறந்த உடனே விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது குழந்தையின் பெற்றோர்கள் பெயரில் கணக்கு திறக்கப்படுகிறது. பெற்றோர் இல்லாத குழந்தைகளாக இருந்தால், அவர்களின் பாதுகாவலர்கள் பெயரில் கணக்கு திறக்கப்படுகிறது. இது போன்ற கணக்குகளைக் குழந்தைக்கு 18 வயது ஆகும்போது அவர்களின் பெயருக்கு மாற்ற வேண்டும்.
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும்: உங்கள் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன், அந்தக் குழந்தையின் அப்போதைய புகைப்படம் மற்றும் ஐடி ப்ரூப்பை வைத்து பான் கார்டு பெற விண்ணப்பிக்கவும். இதுவே, நீங்கள் அந்தக் குழந்தைக்கு முன்னதாகவே பான் கார்டு பெற்று இருந்தால், அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும்.
பேங்க் அக்கவுண்ட்: குழந்தைகள் படிக்கும் போது உதவித்தொகைகளைப் பெறுவதற்கு அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக மைனர் அக்கவுண்டாக திறக்கப்பட்டிருந்தால் 18 வயது ஆனவுடன் அவற்றை மேஜர் அக்கவுண்டாக மாற்ற வேண்டும்.
PPF கணக்கைப் புதுப்பித்தல்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், PPF கணக்குகள் ஒரு மைனர் குழந்தையின் பெயரில் துவங்கப்படலாம். ஆனால் குழந்தைக்கு 18 வயது ஆனதும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அவற்றை அந்த குழந்தையின் பெயருக்கே மாற்றலாம்.
இவற்றை பான் கார்டு விவரங்கள், போட்டோ, ஆதார் கார்டு மற்றும் முகவரி சான்று ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலம், நீங்கள் இந்த கணக்குகளை அப்டேட் செய்து கொள்ளலாம். தனிப்பட்ட கணக்காக மாற்றும் செயல்முறை ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உங்களுக்கு ஒரு புதிய பாஸ்புக் வழங்கப்படும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம் வரிச்சலுகைகளைப் பெறலாம்: உங்கள் மகளுக்கு 10 வயதிற்கு குறைவாக இருக்கும்போது நீங்கள், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் கணக்கைத் தொடங்கியிருந்தால், 18 வயது ஆன பிறகு மாற்றுப் படிவம் மூலம் அவர் மேஜர் ஆகிவிட்டதை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெற முடியும் என்று Bankbazaar.com-இன் CEO ஆதில் ஷெட்டி கூறியுள்ளார்.
ப்ளூ ஆதார் கார்டு: உங்கள் குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டு என்று சொல்லப்படுகிற பால்ய ஆதார் கார்ட் பெற்றிருந்தால், 18 வயது ஆன பிறகு அவற்றை மாற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications