இந்திய பொருளாதாரம் இன்று உலக அரங்கில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உயரத்தை எட்ட நாம் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல. ஒரே நாடு, இரு வேறு துருவங்கள்-ஒன்று, வறுமையும் நிதி நெருக்கடியும் நாட்டை உலுக்கிய 1973-ன் கருப்பு பட்ஜெட். மற்றொன்று, நடுத்தர வர்க்கத்தின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்து இந்தியாவை நவீனமயமாக்கலுக்கு அழைத்து சென்ற 1997-ன் கனவு பட்ஜெட்.
தேசமே தத்தளித்த போது அறிவிக்கப்பட்ட 550 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை முதல் வரி சலுகைகளால் முதலீட்டாளர்களை கட்டிப்போட்ட அதிரடி அறிவிப்புகள் வரை, இந்தியாவின் நிதி வரலாற்றையே மாற்றி அமைத்த அந்த இரண்டு வரலாற்று தருணங்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். காலங்கள் மாறினாலும், இன்றைய நிதி அமைச்சர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இந்த பழைய பட்ஜெட்கள் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம். இது குறித்து இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

கருப்பு பட்ஜெட் (1973): நெருக்கடியில் உதித்த நிதிநிலை அறிக்கை
பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் பி. சவான் 1973-74 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட முதன்மைக் காரணம், அந்த பட்ஜெட்டில் நிலவிய 550 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஆகும். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகையாகவும், பொருளாதார வீழ்ச்சியின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.
கடந்த 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலை போரினால், இந்தியாவின் கஜானா காலியானது. ராணுவ செலவுகள் மட்டும் 1,600 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதோடு அந்த சமயத்தில் 1 கோடிக்கும் அதிகமான அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் மாபெரும் பொறுப்பு அரசாங்கத்தின் மீது விழுந்தது.
அப்படிப்பட்ட மிக மோசமான கால கட்டத்தில் மத்தியில் கடந்த 1972-ல் ஏற்பட்ட மிக மோசமான வறட்சியால் விவசாயமும் முடங்கியது. உணவு பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மின்வெட்டு என நாடே திணறியது. அந்த சமயத்தில் நிதியமைச்சர் சவான், எதிர்காலத்தை பாதுகாக்க கடினமான முடிவுகள் அவசியம் என கூறி, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் பொது காப்பீட்டு துறையை தேசியமயமாக்க 56 கோடி ரூபாயை ஒதுக்கினார். மேலும், வறட்சி நிவாரணத்திற்கு 220 கோடி ரூபாயையும், 20 லட்சம் டன் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய 160 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இது கடினமான பொருளாதார சூழலுக்கு மத்தியில் உயிர்வாழ்வதற்கான ஒரு தற்காப்பு பட்ஜெட்டாக அமைந்தது.
கனவு பட்ஜெட் (1997): சீர்திருத்தங்களின் புதிய விடியல்
இரு தசாப்தங்களுக்கு பிறகு, ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், 1997-ல் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என போற்றப்பட்டது. இந்திய பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தபோது, வளர்ச்சியை தூண்டும் நோக்கில் இந்த பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உச்சகட்ட வருமான வரி விகிதம் 40%-லிருந்து 30%-ஆக குறைக்கப்பட்டது. கார்ப்பரேட் வரி 35%-ஆக குறைக்கப்பட்டது. வரி குறைந்தால் மக்கள் நேர்மையாக வரி செலுத்துவார்கள் என்ற தத்துவத்தையும் இந்த பட்ஜெட்டானது முன்வைத்தது.
குறிப்பாக அந்த சமயத்தில் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வெளிப்படையாக அறிவிக்க, தன்னார்வ வருமான வெளிப்பாட்டு திட்டம் (VDIS) அறிமுகமானது. மேலும் சுங்க வரி மற்றும் கலால் வரிகள் சீரமைக்கப்பட்டன. கார், தொலைபேசி வைத்திருப்பவர்கள், சொத்துக்கள் உள்ளவர்கள், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் என அனைவரும் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக, பட்ஜெட் நாளன்று பங்குச் சந்தை 6.5% உயர்ந்தது. மிக முக்கியமாக 1997-ல் 18,700 கோடி ரூபாயாக இருந்த வருமான வரி வசூல், 2013-ல் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இது அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தின் பொருளாதார தத்துவம் வெற்றி பெற்றதை நிரூபித்தது.
இரண்டு பட்ஜெட்களும் உணர்த்துது என்ன?
1973-ன் கருப்பு பட்ஜெட், இக்கட்டான சூழலில் நாட்டை தக்கவைக்க அரசு எடுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆனால், 1997-ன் கனவு பட்ஜெட், சந்தையை நம்பி வளர்ச்சியை தூண்டும் முன்னேற்ற நடவடிக்கை ஆகும். அதேபோன்று நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் 2026 -ம் வெறும் எண்கள் மட்டுமல்ல, அது ஒரு தேசத்தின் சவால்கள், கனவுகள் மற்றும் அந்த நேரத்தின் பொருளாதார தத்துவத்தின் கண்ணாடி.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications