பிக்சட் டெபாசிட்கள் குறைந்த அளவிலான ரிஸ்கை கொண்ட உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் பிரபலமான முதலீட்டு தேர்வாகும். பிக்சட் டெபாசிட்களின் முக்கிய நன்மைகளில் ஒன்று என்று பார்த்தால் தேவைப்பட்டால் முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறலாம். அதாவது முதிர்வு தேதிக்கு முன்பே பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பிக்சட் டெபாசிட்களில் இருந்து முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு வங்கிகள் அபராதத்தை வசூலிக்கின்றன. இந்த அபராதங்கள் 0.5% முதல் 1% வரை இருக்கும்.
இது டெபாசிட் செய்யப்பட்ட அசல் தொகைக்கு கிடையாது. மாறாக உங்களுக்கு வங்கியோ அல்லது எந்த நிதி நிறுவனத்தில் நீங்கள் டெபாசிட் செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனம் வழங்கிய வட்டிக்கு பொருந்தும்.

நீங்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்து விட்டு முதிர்வு தேதிக்கு முன்னரே பணம் எடுத்தால் கார்டு ரேட்டில் வட்டி செலுத்தப்படும். கார்டு ரேட் என்பது எவ்வளவு நாட்கள் உங்களுடைய பிக்சட் டெபாசிட் செயல்பாட்டில் இருந்ததோ அந்த வட்டி விகிதத்தை குறிக்கிறது. உதாரணமாக நீங்கள் ரூ.1 லட்ச ரூபாயை 5 வருடங்களுக்கு பிக்சட் டெபாசிட் முதலீடு செய்கிறீர்கள். நீங்கள் கணக்கு தொடங்கும் போது 7 சதவீதம் வட்டி என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு ஆண்டுகளுக்குள் பணம் எடுத்து விட்டால் அந்த ஒரு ஆண்டுக்கு எவ்வளவு வட்டி விகிதமோ அதுதான் வழங்கப்படும்.
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். 7 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை பிக்சட் டெபாசிட் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு பிறகு FD தொகையை எடுத்துவிட்டால், 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு எந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ, அதே வட்டி விகிதம் தான் வழங்கப்படும். அதாவது 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 6 சதவீத வட்டி என்றால், நீங்கள் 1 வருடம் கழித்து பணத்தை எடுத்தால் அதே வட்டி விகிதம் தான் பொருந்தும்.
கூடுதலாக 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படலாம். 5 வருடங்கள் முழுவதுமாக பிக்சட் டெபாசிட் செய்திருந்தால் 7 சதவீத வட்டியில் 1 லட்ச ரூபாய்க்கு 7,000 ரூபாய் வட்டி கிடைக்கும். அதுவே முன்கூட்டியே திரும்ப பெற்றால் அதாவது 1 வருடத்திற்குள் திரும்பப்பெற்றால் அதற்கான வட்டி விகிதமான 6 சதவீதம் வழங்கப்படும். அப்படியானால் வருடத்திற்கு 6,000 ரூபாய். இதில் 1 சதவீத அபராதம் விதிக்கப்பட்டால் தொகை 5,000 ரூபாயாக குறையும், இதனால் 2000 ரூபாயை இழக்க நேரிடலாம்.
இந்தத் தொகையும் உங்களுடைய வட்டியில் இருந்து மட்டுமே கழிக்கப்படும். உங்கள் அசல் தொகையில் எந்தவித கழித்தலும் இருக்காது. ஆனால் இந்த வட்டி விகிதம் வங்கியை பொறுத்து மாறுபடும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications