என்ன சொன்னார் RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்! முக்கிய விஷயங்கள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்பிஐயின் பணக் கொள்கைக் கமிட்டியில் 3 அரசு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைவதால், கடந்த செப் 29, செப் 30, அக் 01 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய பணக் கொள்கைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டது.

புதிய உறுப்பினர்கள் நியமனத்துக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 7 முதல் இன்று (அக்டோபர் 9) வரை பணக் கொள்கைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவுப் பகுதிகளில் ஒன்றாக, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அவர் பேசியதில் முக்கிய விஷயங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

இந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.5% குறையலாம்.. ரிசர்வ் வங்கி கணிப்பு..! இந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.5% குறையலாம்.. ரிசர்வ் வங்கி கணிப்பு..!

1. வட்டி விகிதம்

1. வட்டி விகிதம்

ரிவார்ஸ் ரெப்போ ரேட் 3.35 %
மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிட்டி ரேட் (MSFL) 4.25 %
பேங்க் ரேட் 4.25 % எனத் தொடர்கிறது. வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யவில்லை. ஆர்பிஐ அறிவிப்பதற்கு முன்பே பலரும் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாமல் போகலாம் எனச் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

2. ஜிடிபி 9.5 % சரியலாம்

2. ஜிடிபி 9.5 % சரியலாம்

இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, இந்த 2020 - 21 நிதி ஆண்டுக்கு 9.5 சதவிகிதம் சரியலாம் எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. அதோடு கடந்த இரண்டாவது காலாண்டில் உலக பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் சீராக அதிகரிக்கவில்லை எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.

3. கிராம பொருளாதாரம்

3. கிராம பொருளாதாரம்

கிராம பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2020 - 21 நிதி ஆண்டில் புதிய சாதனை படைக்க இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், மீண்டும் நகர் புறங்களுக்குச் சென்று வேலை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஆன்லைன் விற்பனைகள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.

4. நம்பிக்கை & கணிப்புகள்

4. நம்பிக்கை & கணிப்புகள்

இந்தியாவின் பணவீக்கம் 2020 - 21 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இலக்குக்கு அருகில் வரலாம். வியாபார எதிர்பார்ப்புகள் பாசிடிவ்வாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ். அதோடு பிஎம்ஐ (PMI) கடந்த செப்டம்பர் 2020-ல் 56.9 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இது ஜனவரி 2012-க்குப் பிறகு பிஎம்ஐ காணும் மிகப் பெரிய ஏற்றம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் தாஸ். இந்தியாவின் ஜிடிபி மார்ச் 2020 காலாண்டில் பாசிட்டிவ்வாக இருக்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார் தாஸ்.

 5. ஆர் டி ஜி எஸ்

5. ஆர் டி ஜி எஸ்

இந்தியாவில் வியாபார நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் பயன்படுத்தும் ஆர் டி ஜி எஸ் (RTGS - Real Time Gross Settlement) சேவை, வரும் டிசம்பர் 2020 முதல் வாரம் ஏழு நாட்களிலும், 24 மணி நேரமும் கிடைக்கச் செய்ய, ஆலோசித்து இருக்கிறார்கள். இது வியாபார ரீதியான பணப் பரிமாற்றங்கள் விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்யும் எனச் சொல்லி இருக்கிறார் தாஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the important points said by RBI governor Shaktikanta Das today

Today the 3 day bimonthly monetary policy committee meeting has come to an end. RBI governor Shaktikanta Das today spoke about various things today. We have listed out the important points what RBI governor spoke.
Story first published: Friday, October 9, 2020, 13:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X