மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ள நிலையில், அதன் அதிர்வலைகள் தற்போது இந்தியாவையும் பாடாய்படுத்தி வருகின்றன. ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் எரிவாயு இருப்பை உறுதி செய்யவும், சிலிண்டர் பதுக்கலை தவிர்க்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் புதிய புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இனி நினைத்த நேரத்தில் சிலிண்டர் புக் செய்யலாம் என்ற நிலை மாறி, அடுத்த சிலிண்டருக்கு 25 நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உங்கள் பட்ஜெட்டை பாதிக்கப்போகும் அந்த விதிகள் என்ன? எப்போது இந்த சிலிண்டர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும்? நிபுணர்களின் கருத்து என்ன? விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த வகையில் சாமானியர்கள் வீட்டு சமயலறை வரை எதிரொலிக்கும் அளவுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்தது. அது சர்வதேச எரிபொருள் சப்ளையை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 1 முதல் சமையல் எரிவாயும் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, இரண்டாவது சிலிண்டர் புக் செய்ய முன்னதாக 21 நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இது இந்த கால இடைவெளியானது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த சிலிண்டர் முன்பதிவானது கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது எரிவாயு பதுக்கலை தடுக்கவும், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுகும் தடையின்றி சிலிண்டர் வழங்கவும் இந்த கட்டுப்பானது விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலிலும் பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு விஷயம் 14.1 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 195.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2,078 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே சிறிய குடும்பங்கள் பயன்படுத்தும் சோட்டு 5 கிலோ சிலிண்டர் விலை 51 ரூபாய் உயர்ந்து, தற்போது 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசு வட்டாரங்களின் படி, இந்த இக்கட்டான நிலைமை ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே மாத தொடக்கத்தில் முழுமையாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் தடைபட்டிருந்த இறக்குமதி பாதைகளுக்கு மாற்றாக, அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சரக்குகள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியுள்ளன. அதேசமயம் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தியை 28% வரை அரசும் அதிகரித்துள்ளது. ஆக மக்கள் பதட்டம் அடையாமல் பீதியில் புக் செய்யாமல், சரியான காலகட்டத்தில் புக் செய்வது நல்லது.
More From GoodReturns

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications
