PPF என்று சொல்லப்படுகிற பொது வருங்கால வைப்பு நிதி அரசாங்கத்தால் மக்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்கப்படும் ஒரு வகையான முதலீட்டு திட்டம் ஆகும். இதில் சிறந்த வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய குடிமக்களுக்கு பிரபலமான நீண்டகால முதலீட்டு திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. PPF ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள்.
ஆனால் அதற்கு முன்னரே PPF திட்டத்தில் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியுமா? 15 ஆண்டுகள் முடிவதற்குள் பணத்தை எடுத்தால் என்ன அபராதம் விதிக்கப்படும்? உங்கள் PPF கணக்கை முன்கூட்டியே மூட விரும்பினால் என்ன நடக்கும்? என்பது போன்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

முதலீடு செய்த தொகையை திரும்ப் பெறுதல்: 15 ஆண்டுகால முதிர்வுக்காலம் முடிவதற்குள் உங்களுக்கு நிதி தேவைப்பட்டால் 6-வது நிதியாண்டில் இருந்து பகுதி அளவு தொகையை திரும்பப் பெறுவதை PPF திட்டம் அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் பிப்ரவரி 1, 2020 ஆம் ஆண்டு உங்கள் PPF கணக்கைத் திறந்து இருந்தால் 2020 முதல் 2026-ஆம் நிதி ஆண்டிலிருந்து பகுதி அளவு தொகையை திரும்பப் பெற தகுதி பெறுவீர்கள். அதன்படி 50 சதவீத நிலுவைத் தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.
15 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கை மூடலாமா?: உங்கள் PPF கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன் மூட விரும்பினால், உங்கள் கணக்கு குறைந்தது ஐந்து வருடங்கள் செயலில் இருக்க வேண்டும். அப்படியானால் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் கணக்கை மூடலாம்.
எவ்வாறாயினும், 1% வட்டி அபராதம் விதிக்கப்படும், அதாவது உங்கள் கணக்கு செயலில் இருந்த காலத்திற்கு நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தை விட 1% குறைவாகப் பெறுவீர்கள்.
பின்வரும் சூழ்நிலைகளில் முன்கூட்டியே PPF கணக்கை மூடுவது அனுமதிக்கப்படுகிறது.
மருத்துவ அவசரநிலை: உங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டால், நீங்கள் பகுதியளவு PPF திட்டத்தில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறலாம் அல்லது 5 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை மூடலாம்.
உயர் கல்வி: உங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக, காலேஜ் கட்டண ரசீதுகள் மற்றும் காலேஜ் சேர்க்கை ஆவணங்கள் போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பித்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை மூடலாம் அல்லது பகுதியளவு திரும்பப் பெறலாம்.
வெளிநாட்டிற்கு இடம் பெயர்தல்: நீங்களோ அல்லது கணக்கு வைத்திருப்பவர்களோ வெளிநாடு சென்று கொண்டிருந்தால், PPF கணக்கை மூடிவிட்டு, முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
கணக்கு வைத்திருப்பவரின் மரணம்: துரதிர்ஷ்டவசமாக கணக்கு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டால், 5 ஆண்டு விதியைக் கடைப்பிடிக்காமல், முதிர்வுக்கு முன்பே கணக்கை முடித்துவிடலாம். நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு தொகையைத் திரும்பப் பெறலாம்.
PPF கணக்கை முன்கூட்டியே மூடுவது எப்படி?: உங்கள் PPF கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு, கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையில் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் மூடப்பட்டதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் மற்றும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவ அவசரநிலைகளுக்கு, மருத்துவ அதிகாரியிடமிருந்து சான்றிதழ் தேவை. கல்வி நோக்கங்களுக்காக பணத்தைத் திரும்பப் பெற்றால், கட்டண ரசீதுகள் மற்றும் சேர்க்கைக்கான சான்று தேவை. மற்றும் இறப்பு ஏற்பட்டால், இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
வங்கி ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, உங்கள் விண்ணப்பம் செயல்முறை தொடங்கும். அதன் பின் அபராத வட்டி கழிக்கப்பட்டு, பின்னர் கணக்கு மூடப்படும். இந்த விதிகளைப் புரிந்துகொள்வது, உங்கள் PPF கணக்கை நிர்வகிக்க உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications