டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து இருக்கிறது. இந்த நேரத்தில் பொதுவாகவே கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் டீசல் விலையும் குறைய வேண்டும்.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. ஏன் குறையவில்லை என்று கேட்டால் சில பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
அந்த காரணங்கள் மற்றும் கடந்த காலங்களில் இதே போல கச்சா எண்ணெய் குறைந்த போது அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
சராசரி விலை
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்ட உடன், பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பது இல்லை. சுமாராக கடந்த 15 நாட்களின் சராசரி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கிறார்கள். எனவே தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையலாம் என்கிறார்கள்.
வாய்ப்பு குறைவு
அப்படியே 15 நாட்களுக்கு மேல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருந்தாலும், வேறு சில பிரச்சனைகளால், பெட்ரோல் டீசல் விலை குறையாது, அரசு குறைய விடாது என்கிறார்கள் சிலர். அப்படி என்ன செய்து பெட்ரோல் டீசல் விலை குறைவை தடுப்பார்கள் என்றும் பார்ப்போமே.
வரி விதிப்பு
1. இதுவரை பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுமே, மத்திய அரசின் தொலை நோக்கு வரி திட்டமான ஜிஎஸ்டிக்குள் வரவில்லை. காரணம் பெட்ரோல் டீசலில் இருந்து வரும் கணிசமான வருவாய்.
2. கலால் வரி மற்றும் மாநில வாட் வரியை உயர்த்துவது. இந்த இரண்டை வைத்து அரசாங்கங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறையவிட மாட்டார்கள்.
ஜிஎஸ்டி நஷ்டம்
ஜிஎஸ்டிக்குள், பெட்ரோல் டீசலைக் கொண்டு வந்துவிட்டால் ஒட்டு மொத்தமாக 28 சதவிகிதம் தான் வரியை வசூலிக்க முடியும். இப்போது போடுவது போல இஷ்டத்துக்கு கலால் வரி மற்றும் மாநில வாட் வரிகளை விதிக்க முடியாது. எனவே பெரிய அளவில் அரசுக்கு வருவாய் நஷ்டம் ஏற்படும். இதனால் தான் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராமல் இருக்கிறார்கள்.
கஜானா
ஏற்கனவே மத்திய அரசுக்கு பொருளாதார மந்த நிலையில் வர வேண்டிய வரி வருவாய்கள் அத்தனை சிறப்பாக வரவில்லை. எனவே மார்ச் 14, 2020-ல் பெட்ரொல், டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இப்படி கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம், வரியை அதிகரித்தால் பிறகு எப்படி பெட்ரொல் டீசல் விலை குறையும்.
குறைப்பதில்லை
கச்சா எண்ணெய் விலை சரியும் போது கலால் வரியை உயர்த்தும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை அதிகரித்த பின், ஏற்றிய கலால் வரியை குறைத்துக் கொள்ளுமா..? என்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அப்போது நம்மைப் போன்ற வெகு ஜன மக்கள் தான் விலை வாசியை சுமக்க வேண்டி இருக்கும்.
முந்தைய ஏற்றங்கள்
2014-ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பின் பல முறை கலால் வரியை அதிகரித்து இருக்கிறார்கள். அக்டோபர் 2018-ல் மட்டும் கொஞ்சம் பாவப்பட்டு லிட்டருக்கு 2.5 ரூபாய் கலால் வரியைக் குறைத்தார்கள். 2019-ம் ஆண்டு பட்ஜெட்டில் மீண்டும் லிட்டருக்கு 1 ரூபாய் என வரியை அதிகரித்து விட்டார்கள். இப்படி 2014 முதல் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையில் பெரிய இறக்கங்களைக் காணாமலேயே போய்க் கொண்டு இருக்கிறது.
பெட்ரோல் கணக்கு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கணக்குப் படி டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியாக (Excise Duty) 19.98 ரூபாயும், டெல்லி மாநில வாட் வரியாக (State Value Added Tax) 15.25 ரூபாயும் செல்கிறதாம். வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் 71.71 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.
டீசல் கணக்கு
அதே போல ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரியாக (Excise Duty) 15.83 ரூபாய் வசூலிக்கப்படுகிறதாம். மாநில வாட் வரியாக (State Value Added Tax) 9.48 ரூபாய் வசூலிக்கிறார்களாம். வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் 64.3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்கிறார்கள்.
காங்கிரஸ் பாஜக
2010-ம் ஆண்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என காங்கிரஸ் அரசு சொன்னது. 2014-ம் ஆண்டு பாஜக அரசு டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனச் சொன்னது. கடைசியில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பெட்ரொல் டீசல் ஆகிய இரண்டுக்கும் தினமும் விலையை நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசியில் மக்கள் தான் அல்லோலப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications