இன்று மாலை வெளியான ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருக்கிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியப் பொருளாதாரத்தின் மிகக் குறைந்த ஜிடிபி வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இவ்வளவு குறைந்து போய்விட்டது..?
காரணம் 1 என் பி எஃப் சி
இந்தியாவின் நிழல் வங்கி என்று சொல்லப்படும் என் பி எஃப் சி - (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) நிறுவனங்களில் இருந்து தொடங்கியது. இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதற்கான பணத்தை, இந்திய வங்கிகளிடம் இருந்து தான் வாங்குகிறார்கள். அப்படி கடன் வாங்கிய பணத்தை, அவர்கள் வேறு சில நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பார்கள். என் பி எஃப் சி வங்கியிடம் கடன் வாங்கியவர்கள், முறையாக பணத்தை திருப்பிச் செலுத்தினால், என் பி எஃப் சி நிறுவனமும் வங்கிகளுக்கு பணத்தை செலுத்தி விடும். ஆனால் இங்கு கதை அப்படியே மாறிவிட்டது.
நோ மணி
என் பி எஃப் சி கடன் கொடுத்த பல நிறுவனங்கள், ஒழுங்காக பணத்தைச் செலுத்தவில்லை. அதாவது என் பி எஃப் சி நிறுவனங்கள் கொடுத்த கடன் திரும்ப வரவில்லை. எனவே வங்கிகளிடம் கடன் வாங்கிய என் பி எஃப் சியால், வங்கிகளுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து என் பி எஃப் சி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியது. உதாரணம் திவான் ஹவுசிங்.
காரணம் 2 - க்ரெடிட் க்ரன்ச்
ஒரு வங்கி கடன் கொடுக்கிறது என்றால், அந்த கடன் + கடனுக்கான வட்டி ஒழுங்காக திரும்ப வந்தால் தானே வங்கி ஓடும். ஆனால் நம் அரசு வங்கிகள் அப்படி ஓடவில்லை. கொடுத்த கடன்கள் பலதும் வாராக் கடன்கள் ஆகிவிட்டன. (உதாரணம் ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷ்ஷர், நிதின் சந்தேசரா... )சாதாரண அரசு வங்கிகளில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. ஆக வங்கிகளால் புதிதாக, யாருக்கும் கடன் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுக்க நினைத்தாலும், பணம் இல்லை. இதை ஆங்கிலத்தில் Credit Crunch என்கிறோம். புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் வியாபார விரிவாக்கங்களுக்கு கூட கடன் கொடுக்கவில்லை என்றால் எப்படி நாடு வளரும்.
காரணம் 3 - டிமாண்ட் சப்ளை
பொதுவாக உலகத்தின் எல்லா பொருளாதாரத்திலும் அதி முக்கியமான இரண்டு விஷயங்கள் என்றால் அது தேவை (டிமாண்ட்) மற்றும் சப்ளை. இந்தியாவில் இந்த இரண்டில் டிமாண்ட் தான் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களுக்கு டிமாண்ட் இல்லை. உதாரணம் ஆட்டோமொபைல் துறை. இந்திய ஆட்டோமொபைல் துறைகள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் வாகனங்களை வாங்கவே ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து வேலை இல்லா நாட்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டூத் பேஸ்ட், குளியல் சோப்பிலுமா
வெறும் கார், இரு சக்கர வாகனங்கள் என்பதைத் தாண்டி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பேஸ்ட், பல்பொடி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை (டிமாண்ட்) கூட குறைந்து இருக்கிறதாம். இதனால் பொருட்களின் விற்பனை சரிந்து இருப்பதாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனங்களே சொல்லி இருக்கின்றன. இந்த சிக்கல்களுக்கு முக்கிய காரணம் மக்கள் கையில் பொருட்களை வாங்க பணம் இல்லாதது தான்.
காரணம் 4 - வேலை இல்லா திண்டாட்டம்
சமீபத்தில் தான் இன்ஃபோசிஸ், காக்னிசண்ட், கேப் ஜெமினி போன்ற ஐடி நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து, சுமாராக, 20,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொன்னது. கடந்த சில மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து பல்வேறு காலங்களில் சுமார் 20 - 30 ஆயிரம் பேருக்கு உறுதியாக வேலை பறி போய் இருக்கிறது. அதோடு ஒப்பந்த ஊழியர்களுக்கான காண்டிராக்டுகளும் நீடிக்கப்படவில்லை. ஏற்கனவே வெளியில், வேலை இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என அரசின் வேலை இல்லா திண்டாட்ட தரவுகளே சொல்கின்றன. இப்படி வேலை வாய்ப்புகளை எல்லாம் பறித்துவிட்டால், மக்கள் கையில் எப்படி பணம் புழங்கும், மக்கள் கையில் பணம் இல்லை என்றால், எப்படி தைரியாமாக செலவு செய்வார்கள்..? செலவு செய்யவில்லை என்றால் எப்படி தேவை அதிகரித்து சப்ளை அதிகரிக்கும். ஆக தேவையும் நுகர்வும் சரியத் தானே செய்யும்..?
காரணம் 5 - நஷ்டம் + பயன் இல்லை
சுமாராக கடந்த 12 மாத காலமாக இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதை சமாளிக்க, மத்திய அரசு, தன்னால் முடிந்த வரை பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
1. கார்ப்பரேட் வரியைக் குறைத்தது,
2. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்தது,
3. மூல தன ஆதாய வரியைக் குறைத்தது,
4. ஏற்றுமதியை அதிகரிக்க வரியை குறைத்தது என பல நடவடிக்கைகளை தில்லாக எடுத்து இருக்கிறது. இவை எல்லாமே நல்ல நடவடிக்கைகள் தான். ஆனாலும் பொருளாதாரம் மேம்படவில்லை. மாறாக, அரசுக்கு வர வேண்டிய வரி வருவாயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து இருக்கலாம்.
காரணம் 6 -அரசு முதலீடு
இப்படி அரசுக்கே வர வேண்டிய வரி வருவாய் ஒழுங்காக வராததால், மத்திய அரசு தலையிட்டு செலவு செய்து, பொருளாதாரத்தை மந்த நிலையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அதாவது Government Spending சுத்தமாக குறைந்துவிட்டது. அரசின் வருவாய் பிரச்னையை தீர்க்க, ஆர்பிஐ-யிடம் இருந்து வாங்கிய 1.76 லட்சம் கோடியும் எங்கு போனது என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதே போல தன் வருவாயை பெருக்கிக் கொள்ள பொதுத் துறை நிறுவனங்களையும் விற்க அசுரத் தனமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் இதுவரை என்ன பலன் கண்டார்கள் என்றே தெரியவில்லை. மாறாக பி எஸ் என் எல் போன்ற அரசு நிறுவனங்களில் இருந்து சுமார் 92,000 ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்ப இருப்பது தான் மிச்சம்.
காரணம் 6 - கொள்கை மாற்றங்கள்
இத்தனை சிக்கல்களையும் சரி செய்ய, அரசு தன் கொள்கை ரீதியிலான மாற்றங்களையும், வழிமுறைகளையும் கையாண்டு இருக்கிறது.
1. ஆர்பிஐ இந்த 2019-ல் மட்டும் சுமாராக 1.35 சதவிகிதம் ரெப்போ வட்டியைக் குறைத்தது
2. ரியல் எஸ்டேட் துறையை சரி செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்தது, என்பிஎஃப்சி நிறுவனங்களை மீட்க நிதி ஒதுக்கியது,
3. வங்கிகள் இணைப்புக்கு உத்தரவிட்டது... என தங்களுக்கு இருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் பயன்படுத்திக் கொண்டே வருகிறார்கள். ஆனால் பொருளாதார மந்த நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இப்படித் தானே இருக்கும்
இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளை வைத்துக் கொண்டு இந்தியாவின் ஜிடிபி குறைந்துவிட்டது என்று வருத்தப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது. உண்மையாகவே நம் பொருளாதாரம் பலவீனமாகத் தான் இருக்கிறது. அந்த பலவீனம் தான், இன்று அரசு வெளியிட்ட ஜிடிபி தரவுகளிலும் பிரதிபலித்து இருக்கிறது. இந்த பிரச்னைகளில் சில பிரச்னைகளை மட்டுமாவது முழுமையாக சரி செய்யாதவரை நம் ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று தான். அரசு இந்த பிரச்னைகளை சரி செய்யும் என நம்புவோம்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications