கிரெடிட் கார்டு பயனர்களே! கிரெடிட் கார்டு எக்ஸ்பைரி ஆனால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

ஒரு கிரெடிட் கார்டு எக்ஸ்பயரி ஆகிவிட்டால் அதன் பின்னர் உங்களுடைய நிதிப் பொறுப்புகள் அதோடு முடிவடையாது. காலாவதியான கிரெடிட் கார்டில் ஏதேனும் நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை உடனடியாக செலுத்துவது அவசியம். ஒருவேளை நீங்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். அதோடு உங்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு எக்ஸ்பயரி ஆனாலும் நிலுவைத் தொகையை நிர்வகித்து சரியாக செலுத்துவதற்கு வழிகள் இருக்கின்றன. இந்தப் பதிவில் ஒரு கிரெடிட் கார்டு எக்ஸ்பயரி ஆகிவிட்டால் என்ன செய்வது? என்பது குறித்து பார்ப்போம்.

உங்களுடைய கிரெடிட் கார்டு எக்ஸ்பயரி ஆனால் என்ன நடக்கும்?: கிரெடிட் கார்டு எக்ஸ்பயரி ஆகிவிட்டால் உங்கள் நிலுவைத் தொகை அப்படியே தான் இருக்கும். எக்ஸ்பயரி ஆன கிரெடிட் கார்டை வைத்து எந்தவித பரிவர்த்தனையும் செய்ய முடியாது. எனவே உங்கள் வங்கி அதற்கு மாற்றாக புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்பயரி தேதியுடன் கூடிய புதிய கார்டை வழங்கும். அதோடு உங்கள் கணக்கு நிலுவைத் தொகை மற்றும் கிரெடிட் வரம்பு உட்பட அனைத்தும் நீங்கள் கிரெடிட் கார்டை மூடக் கோரும் வரை செயலில் இருக்கும்.

 கிரெடிட் கார்டு பயனர்களே! கிரெடிட் கார்டு எக்ஸ்பைரி ஆனால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

கிரெடிட் கார்டு எக்ஸ்பயரி ஆனால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?:

உங்கள் கிரெடிட் அறிக்கையை சரி பாருங்கள்: உங்கள் கிரெடிட் கார்டு காலாவதியாகிவிட்டால் உங்கள் கிரெடிட் கணக்கை ஆன்லைனில் சரிபார்க்கலாம். உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவை தொகை, குறைந்தபட்ச தொகை ஆகியவை அறிக்கையில் காண்பிக்கப்படும். இதை வைத்து ஏதேனும் பேமெண்ட் செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனைப் பயன்படுத்தவும்: பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டு பில்களை ஆன்லைனில் செலுத்த அனுமதிக்கின்றன. நெட் பேங்கிங் மூலம் உள்நுழைந்து பேமெண்ட் செலுத்தலாம். மொபைல் அப்ளிகேஷன்களில் உள்நுழைந்து கிரெடிட் கார்டு என்ற செக்ஷனுக்கு செல்லவும். பட்டியலிடப்பட்டுள்ள எக்ஸ்பயரியான கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு விவரங்களை வழங்கி யுபிஐ மூலம் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தவும்.

கேஷ் பேமெண்ட்: ஆன்லைன் பரிவர்த்தனை உங்களுக்கு வசதியானதாக இல்லை என்றால் நிலுவைத் தொகையை செலுத்த உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்லவும். உங்கள் கிரெடிட் கார்டு கணக்கு எண்ணுக்கு ஒரு செக்கை எழுதி வழங்கவும். அப்படி இல்லை என்றாலும் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆனால் இதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்: எக்ஸ்பயரியான கிரெடிட் கார்டு குறித்து உங்களுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் உடனடியாக உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தி கிரெடிட் ஸ்கோர் குறைவதையும் அபராதத்தோடு சேர்த்து கட்டுவதையும் தவிர்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+