வேலைக்கு செல்லும் ஒவ்வொரு இந்தியரின் பாக்கெட்டிலும், எதிர்காலத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது புதிய தொழிலாளர் சட்டங்கள். பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labour Codes) கடந்த ஆண்டு இறுதி கட்டத்தை எட்டின. இது வெறும் சட்ட மாற்றம் மட்டுமல்ல, தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் வாழ்க்கை முறையையே மாற்றியமைக்க வந்த ஒரு புரட்சியாக பார்க்கப்பட்டது. இதன் மூலம் உங்கள் சேமிப்பு மற்றும் சம்பளப் பட்டியலில் ஏற்படப்போகும் மாற்றங்களை விரிவாக அலசுவோம்.
கடந்த நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், இந்திய வேலைவாய்ப்பு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை பல்வேறு சட்டங்களின் கீழ் வெவ்வேறு விதமாக வரையறுக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மாற்றி, இப்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான தொழிலாளர் சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் சட்டங்கள் 2025!
இந்தியாவின் தொழிலாளர் சந்தையை நவீனமயமாக்கவும், ஊழியர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1.ஊதிய சட்டம்
இது சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பான விதிகளை நிர்வகிக்கிறது.
அடிப்படை சம்பளம்: ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம், அவரது மொத்த சம்பளத்தில் (CTC) குறைந்தது 50% இருக்க வேண்டும். இதனால் உங்கள் HRA மற்றும் இதர படிகள் 50%க்கு மேல் இருக்க முடியாது. இதன் விளைவாக அடிப்படை சம்பளம் உயர்வதால், பிஎஃப் (PF) மற்றும் கிராஜுவிட்டி (Gratuity) பங்களிப்பு அதிகரிக்கும். இதனால் கையில் வாங்கும் சம்பளம் சற்று குறையும், ஆனால் ஓய்வு கால சேமிப்பு அதிகரிக்கும்.
2. சமூக பாதுகாப்பு சட்டம்
அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. அதாவது முறைசாரா தொழிலாளர்கள், கிக் ஊழியர்களுக்கும் இனி சமூக பாதுகாப்பு திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். அதோடு கிராஜிவிட்டி 5 ஆண்டுகள் வரை காத்திருக்காமல், ஓராண்டு முடிவிலேயே விகிதாச்சார அடிப்படையில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
3. தொழில்துறை உறவுகள் சட்டம்
புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களை மட்டுமல்ல, புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவை இது முறைப்படுத்துகிறது.
300 ஊழியர்கள் வரை கொண்ட நிறுவனங்கள், அரசின் முன் அனுமதி இன்றி ஆட்குறைப்பு செய்யவோ அல்லது நிறுவனத்தை மூடவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு இது 100 ஆக இருந்தது.
மேலும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய விரும்பினால், அதற்கு 60 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமை சட்டம்
பணியிடத்தின் தரம் மற்றும் வேலை நேரத்தை இது தீர்மானிக்கிறது. வாரத்திற்கு 48 மணிநேர வேலை என்ற விதி மாறாது. ஆனால், நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வீதம் 4 நாள் வேலை (4-day work week) முறையை அறிமுகப்படுத்தலாம். இதற்கு ஈடாக வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். பெண்களின் சம்மதத்துடன் இரவு நேரப் பணிகளில் (7 PM - 6 AM) அவர்களை ஈடுபடுத்தலாம். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
புதிய சம்பள கட்டமைப்பின் விளக்கம்!
மொத்த ஊதியம் (CTC) 20,00,000 ரூபாய் கொண்ட ஒரு நபரின் சம்பளத்தை உதாரணமாகக் கொள்ளலாம். இதில்
அடிப்படை சம்பளம் - ரூ.8,00,000
சிறப்பு படிகள் - ரூ.5,80,000
வீட்டு வாடகை படி (HRA) - ரூ.4,00,000
விடுமுறை பயண சலுகை (LTC) -ரூ.1,00,000
தொலைபேசி கட்டணம் திருப்பி செலுத்துதல் - ரூ.12,000
உணவு வவுச்சர்கள் - ரூ.12,000
நிறுவனத்தின் பிஎஃப் பங்களிப்பு - ரூ.96,000
மொத்தம் - ரூ.20,00,000
மேற்கண்ட அம்சங்களில் அடிப்படை சம்பளம் மற்றும் சிறப்பு படிகள் மட்டுமே புதிய சட்டத்தின் படி, பிஎஃப் மற்றும் இதர சட்டப்பூர்வ பலன்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும். இது மட்டுமே ஊதியம் என்பதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தவிர்க்கப்படுபவை: வீட்டு வாடகை படி, விடுமுறை பயண சலுகை, தொலைபேசி கட்டணம் திருப்பி செலுத்தல், உணவு வவுச்சர்கள் மற்றும் நிறுவனத்தின் பிஎஃப் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்தும் ஊதியம் என்பதில் இருந்து தவிர்க்கப்படுகின்றன.
பழைய வரி முறை Vs புதிய வரி முறை
மொத்தம் 20 லட்ச சம்பளத்தில் பழைய வரி முறைப்படி வரிக்குரிய சம்பளம் 13,80,000 . இதற்கு செலுத்த வேண்டிய வரி 1,90,008 ரூபாயாகும். இதே புதிய சட்டத்தின் கீழ் மொத்த வரிக்குரிய சம்பளம் 18,92,000 ரூபாயாகும். இதில் செலுத்த வேண்டிய வரி 1,69,936 ரூபாயாகும். இதன் படி புதிய வரி முறையை தேர்ந்தெடுக்கும் போது சுமார் 20,000 ரூபாய் வரை குறைகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications