நம் நாட்டில் உள்ள பெரும்பாலான நபர்கள் வங்கியில் ஒரு அக்கவுண்டு திறந்து அதில் பணத்தை சேமித்து வருகின்றனர். பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழி என்றால் அது வங்கி கணக்கு தான். மேலும் இதில் மாதம் தோறும் சிறிது வட்டியைப் பெற முடியும். ஒரு நபர் எத்தனை சேமிப்பு கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கென்று எந்த ஒரு வரம்புகளும் இல்லை. எனவே இந்தக் கட்டுரையில் நீங்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதைப் பற்றியும், வரி மற்றும் வட்டி விதிகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
தகவல்களின்படி, ஒரு தனி நபர் தனது சேமிப்புக் கணக்கில் கண்டிப்பாக குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். அதாவது, அவருடைய அக்கவுண்டில் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருக்கக் கூடாது. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை நீங்கள் அதில் டெபாசிட் செய்து கொள்ளலாம். அதற்கு வரம்புகள் எதுவும் இல்லை. நீங்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்து உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.

இருப்பினும், ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்,உங்களது வங்கி, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) உங்கள் டெபாசிட் தொகை குறித்து தெரிவிக்கும். கேஷ் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள் மற்றும் FD முதலீடுகள் போன்ற பிற வகையான முதலீடுகளுக்கு இந்த விதிமுறை பின்பற்றப்படும்.
வருமான வரிச் சட்டம் அல்லது வங்கி விதிமுறைகளின்படி வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு வரம்பு இல்லை. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு பெறப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். வங்கிகள் வட்டியில் 10% TDS கழித்து விடுகின்றன.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTA-இன் படி இந்திய குடிமக்கள் தங்கள் வரித் தொகைகளை ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யலாம் என்று கூறப்படுகிறது. வட்டித் தொகை 10,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், தனிநபருக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. கணக்கு வைத்திருப்பவர் 60 வயதுக்கு மேல் இருந்தால், 50,000 ரூபாய் வரையிலான வட்டிக்கு, அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால், அதனைப் பற்றி உங்களிடம் கேட்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. அவர்களுடைய விசாரணையில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய விஷயம் கண்டறியப்பட்டால், உங்களிடம் இருந்து , 60 சதவீத வரி, 25 சதவீத கூடுதல் கட்டணம் மற்றும் 4 சதவீத செஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications