நீங்கள் கல்லூரி மாணவராக இருந்தால் அல்லது கல்லூரியில் நுழையப் போகிறவராக இருந்தால் அல்லது தொழிலை மாற்ற முயற்சிப்பவராக இருந்தால், குறிப்பாக ஐடி மற்றும் டெக் ஊழியர்களாக இருந்தால் இந்த ரிப்போர்ட் உங்களுக்கானது. சர்வதேச வர்த்தக சந்தை எப்போதும் இல்லாத வகையில் தற்போது பெரிய அளவில் மாறிவருவதை கண்டு வருகிறோம்.
ஆட்டோமொபைல் துறையில் துவங்கி மின்சார உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடுகள், டிஜிட்டல் சேவைகள் என அனைத்து துறையிலும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் என உலகின் முன்னணி நாடுகள் அனைத்திலும் வேகமாக மாறி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மாறுவதை தாண்டி, வேலைவாய்ப்பு சந்தையும் மாறுகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் உலகளவில் 800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உலகப் பொருளாதார மன்றம் (WEF) முக்கியமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை தான் அடுத்த 5- 10 வருடத்திற்கு வேலைவாய்ப்பு சந்தையை தீர்மானிக்க உள்ளது.
உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் அடுத்த 5 வருடத்தில் உலகில் மிகவும் ஹாட்டான வேலைவாய்ப்பு அதாவது அதிகப்படியான டிமாண்ட் கொண்ட வேலைவாய்ப்பு எது என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது.
EV Specialists - வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தைக்கு மிகவும் முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று. எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்ற நிலை வந்த பின்பு இத்துறையில் கைதேர்ந்தவர்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரிக்கப்போகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் ஸ்பெஷலிஸ்ட் - மருத்துவ துறை முதல் ஈகாமர்ஸ் வரையில் அனைத்து துறையிலும் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு விகித்து வரும் வேளையில், இதன் தொடர் மேம்பாட்டுத்துறை மெஷின் லேர்னிங் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் அடுத்த 5- 10 வருடத்தில் AI/ML வல்லுனர்கள் அதிகப்படியான டிமாண்ட் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுற்றுச்சூழல் ஆய்வாளர் - உலகமே கிரீன் எனர்ஜி துறையை தேடி ஓடிக்கொண்டு இருக்கும் போது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
Sustainablity எக்ஸ்பர்ட் - அனைத்து துறையிலும் பெரும் மாற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் போது நிலைதன்மையை உறுதி செய்ய Sustainablity எக்ஸ்பர்ட் அவசியம்.
பின்டெக் எக்ஸ்பர்ட் - வங்கி மற்றும் நிதியியல் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமான நிலையில் இத்துறை வல்லுனர்கள் மிக மிக அவசியம். கடன் கொடுப்பது என்பது சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் அதை யாருக்கு, எதற்கு, எப்போது, கொடுக்கப்பட வேண்டும் என்பதில் துவங்கி எப்படி வசூலிப்பது என்பது வரையில் தீர்மானிக்கும் பார்மூலா-வை வகுப்பவர்கள் பின்டெக் எக்ஸ்பர்ட் தான். இது மட்டும் அல்லாமல் சந்தையில் தேவையான புதிய புதிய பிட்டெக் சேவைகளையும் உருவாக்குவது இவர்கள் தான்

டேட்டா அனலிஸ்ட் - டயப்பர் வாங்குவது முதல் ராக்கெட் ஏவுவது வரையில் டேட்டா சேகரிக்கப்படும் உலகமாகிவிட்ட நிலையில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டேட்டா அனலிஸ்ட் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ரோபோட்டிக்ஸ் இன்ஜினியர்ஸ் - உற்பத்தி முதல் சேவை துறை வரையில் இயந்திரமயமாக்கல் முக்கியமானதாக மாறிவிட்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications