டெல்லி: மத்திய அரசு உள்கட்டமைப்பு, வேளாண்மை மற்றும் எம்எஸ்எம்ஈ துறைகளை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிடும் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்த தனது முன்னோட்ட பார்வையை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை அறிவிக்கும் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்ட மாற்று முறைகளை அரசு அறிமுகம் செய்யும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது வரி இல்லாத பத்திரங்கள் மற்றும் வரி செலுத்தும் பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக அமையும் என்றும் இது நிதி திரட்டலுக்கான செலவினத்தை குறைக்கும் என்றும் பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வேளாண்மை துறையை பொறுத்த வரை அரசு வேளாண் கடன்களை வழங்குவதற்கு என ஒரு சிறப்பு நிதியத்தை கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Agri Value Chain Financing என்பதை உள்ளடக்கிய வேளாண் கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. இது வேளாண் துறையை வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் சொந்த வீடு என்ற திட்டத்தின் கீழ் Priority Sector Lending என்ற பிரிவில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஆறு மெட்ரோ நகரங்களில் 65 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு திட்டங்களுக்கும், மற்ற பகுதிகளில் 50 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு திட்டங்களையும் Priority Sector Lending என்ற பிரிவில் மலிவு விலை வீடுகளாக அரசு வரையறை செய்யும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அரசு உற்பத்தி துறையில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதியுதவி திட்டத்தை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஆடை உற்பத்தி ,கைவினைப் பொருட்கள் ,உணவு பதப்படுத்தும் தொழில்கள், தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் துறைகளில் அரசு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதி திட்டத்தை அறிவித்தால் வேலைவாய்ப்புகள் பெருகும் என பாரத ஸ்டேட் வங்கி பரிந்துரை செய்கிறது.
எம்எஸ்எம்ஈ எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவில் வழங்கப்படும் கடன்களை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் அரசு அறிவிக்கும் என பாரதி ஸ்டேட் வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. மத்திய அரசு இந்தியாவில் பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருக்கும் நிலையில் அதற்கென தனியாக பசுமை வரி நடைமுறையை கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்காக ஒரு நிதி தொகுப்பினை அரசு கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச கல்வி நிறுவனங்களோடு இணைந்து இந்திய நிறுவனங்களும் இந்திய மாணவர்களும் செயல்பட ஏதுவாக பல்வேறு சீர்திருத்தங்களை அரசு கொண்டு வரலாம் என பாரத ஸ்டேட் வங்கி கூறுகிறது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாக பட்ஜெட் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications