குஜராத்: ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது. இதனை நிறுவிய பெருமை திருபாய் அம்பானியையே சாரும். திருபாய் அம்பானியின் 93ஆவது பிறந்த நாளில் அவருடைய வாரிசுகள் என்ன செய்கின்றன, தந்தை எடுத்த தொழில் சக்கிரவர்த்தி என்ற பெயரை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
திருபாய் அம்பானி: 1932 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்தான் திருபாய் அம்பானி. இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட தொழிலதிபர்களில் முக்கியமான நபர் திருபாய் அம்பானி. கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அவர் காலமானார். சாதாரண கிளர்க்காக ஏமனில் வேலைக்கு சென்றவர்தான் திருபாய் அம்பானி.

பின்னர் 1966 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி அவர் ரிலையன்ஸ் கமர்சியல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினர். ஒரு சிறிய ஆடை உற்பத்தி நிறுவனமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம் பின்நாளில் பெட்ரோகெமிக்கல், ரீடைல் என பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, நீனா கோத்தாரி மற்றும் தீப்தி சல்கோவாக்கர் என நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
மூத்த மகன் முகேஷ் அம்பானி: முகேஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய தூணாக இருக்கிறார். 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தவர் தான் திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானி.
தன்னுடைய தந்தை காலமானதை அடுத்து ரிலையன்ஸ் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளையும் இவர் ஏற்றுக்கொண்டார். தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் ரிலையன்ஸ் குழுமத்தை பல்வேறு துறைகளுக்கும் விரிவாக்கம் செய்து இன்னும் அதனை வளர்த்து வருகிறார்.
இளைய மகன் அனில் அம்பானி: திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானி 1959 ஆம் ஆண்டு பிறந்தவர். 2005 ஆம் ஆண்டு இவர்களுடைய குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இவர் தனியாகப் பிரிந்து ரிலையன்ஸ் குரூப் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் கீழ் தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு, நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்தார். தொழிலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டவர் தான், ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தும் பெற்றிருந்தார்.
மூத்த மகள் நீனா கோத்தாரி: முகேஷ் அம்பானியின் சகோதரி நீனா கோத்தாரி 2003 ஆம் ஆண்டு உணவு மற்றும் பானங்கள் விற்பனைத்துறையில் கால் பதித்தார். ஜாவா கிரீன் என்ற பெயரில் இவர் காபி மற்றும் ஸ்னாக்ஸ் விற்பனை கடையை தொடங்கினார்.
தொடக்கத்தில் இவருடைய நிறுவனம் பல்வேறு நகரங்களுக்கும் விரிவடைந்து சிறப்பாக செயல்பட்டது. ஆனால் 2015 ஆம் ஆண்டு அவருடைய கணவர் இறந்ததை அடுத்து நீனா கோத்தாரி, கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இளைய மகள் தீப்தி சல்கோவாக்கர்: திருபாய் அம்பானியின் இளைய மகள் தான் தீப்தி சல்கோவாக்கர். இவர் 1983 ஆம் ஆண்டு கோவாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் தத்தாராஜ் சல்கோவாக்கர் மின்சார உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களின் ஈடுபட்டு வருபவர். தன்னுடைய கணவரின் நிறுவனத்தில் துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். இது தவிர கோவா கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
மூத்த மருமகள் நீதா அம்பானி: திருபாய் அம்பானியின் மருமகளான நீதா அம்பானி முகேஷ் அம்பானியின் மனைவி இவர். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் முக்கியமான ஒரு நபராக செயல்பட்டு வருகிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கி வரக்கூடிய நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் தலைவராகவும் இருக்கிறார்.
மருமகள் தீனா அம்பானி: அனில் அம்பானியின் மனைவியான தீனா அம்பானி ஒரு பாலிவுட் நடிகை ஆவார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதை கைவிட்டு விட்டு சமூக நலப் பணிகளை கையில் எடுத்திருக்கிறார். தற்போது இவர் மும்பையில் செயல்பட்டு வரக்கூடிய கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைவராக இயங்கி வருகிறார்.
பேரன் ஆகாஷ் அம்பானி: திருபாய் அம்பானியின் முதல் பேரன் ஆகாஷ் அம்பானி. முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகனான இவர் தற்போது தந்தையுடன் இணைந்து குடும்ப தொழில்களை கவனித்து வருகிறார்.
பேத்தி ஈஷா அம்பானி: திருபாய் அம்பானியின் செல்ல பேத்தி, முகேஷ் அம்பானியின் செல்ல மகள். தற்போது ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்.
பேரன் ஆனந்த் அம்பானி: முகேஷ் அம்பானியின் இளைய மகன். அண்மையில் தான் இவருக்கு உலகமே பார்க்கும் வகையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தந்தையுடன் இணைந்து தொழில்களை கற்று வருகிறார்.
பேரன்கள் ஜெய் அன்மோல், ஜெய் அன்சுல் அம்பானி: அனில் அம்பானி - தீனா அம்பானி தம்பதியின் மகன்கள் தான் ஜெய் அன்மோல் மற்றும் ஜெய் அன்சுல். இவ்விருவரும் படிப்பை முடித்து விட்டு தந்தை நஷ்டமடைந்த தொழிலை படிப்படியாக மீட்டு வருகின்றனர்.
மகள் வழி பேரன் விக்ரம் சல்கோவாக்கர்: தீப்தியின் மகன் தான் இவர். இவர் பெரிய அளவில் பொது இடங்களில் வருவது இல்லை, புகழ் வெளிச்சமும் தேடுவதில்லை. குடும்ப தொழிலை கவனித்து வருகிறார்.
மகள் வழி பேரன் பேத்தி: நீனா கோத்தாரியின் மகன் அர்ஜூன் கோத்தாரி தற்போது கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்பட்டு வருகிறார். நீனாவின் மகள் நயந்தாரா கோத்தாரி பிரபல தொழிலதிபர் கே.கே.பிர்லாவின் பேரன் ஷமித் பார்த்தியாவை திருமணம் செய்து கொண்டார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications