கர்நாடகா முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை அம்மாநிலத்திற்கான 3.71 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மெகா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சித்தராமையா மாநிலத்தின் முதல்வராக இருப்பது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் நிதி இலாகாவையும் வைத்திருக்கிறார்.
சித்தராமையா 15வது முறையாகப் பட்ஜெட்டை தாக்கல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ஐடி நகரமாக விளங்கும் பெங்களூருவை உலகளாவிய நகரமாகக் காட்டுவது தனது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று கூறிய அவர், நகரத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பெரும் நிதி பங்கை ஒதுக்கினார்.

பெங்களூரில் தமிழ் மக்கள் அதிகப்படியானோர் வசித்து வருகின்றனர், தமிழக எல்லை பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் தினசரி பெங்களூர் செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் அதிகம். இதேபோல் பல தலைமுறையாகப் பெங்களூரில் வாழும் தமிழ் சமூகம் ஏராளம், இந்த நிலையில் கர்நாடகா பட்ஜெட்டில் பெங்களூர் நகருக்கு என்ன கிடைத்தது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாநில பட்ஜெட்டில் பெங்களூருக்கு என்ன கிடைத்தது
பொதுப் போக்குவரத்து: பெங்களூர் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்தில் கவனம் செலுத்தப்படும் எனக் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பட்ஜெட் அறிக்கையில் கூறினார்.
147 கிமீ சாலை: 1,700 கோடி ரூபாய் செலவில் 147 கிமீ நீளமுள்ள முக்கியச் சாலைகளை ஒயிட் டாப்பிங் அதாவது தார் சாலையின் மீது கான்கிரீட் சாலை அமைக்கும் பணி டிசம்பர் 2025-க்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஹெப்பல்: அதிகப் போக்குவரத்து நெரிசல் உள்ள ஹெப்பல் ஜங்ஷனில் சோதனை அடிப்படையில் நிலத்தடி சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
PRR சாலை: போக்குவரத்து நெரிசலை நிவர்த்திச் செய்வதற்கும், பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் பெரிஃபெரல் ரிங் சாலையை (பிஆர்ஆர்) இனி பெங்களூரு வணிகப் பாதையாக மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இனி புதிய முதலீடுகள் அனைத்தும் இப்பகுதியில் தான் வரும்.
முக்கியச் சாலை: பிஆர்ஆர் சாலை என்பது பெங்களூரில் பிரபலமாக அறியப்படும் அவுட்டர் ரிங் ரோட்டை காட்டிலும் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இது தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலையை ஹெசர்கட்டா, தொட்டபல்லாபூர், பல்லாரி, ஹென்னூர்-பாகளூர், பழைய மெட்ராஸ், ஹோஸ்கோட்-ஆனேக்கல் மற்றும் சர்ஜாபூர் வழியாக இணைக்கும். மீதமுள்ள பகுதியை நைஸ் ரோடு வழியாக இணைக்கப்பட்டுள்ளது, இந்த PRR சாலை கிட்டத்தட்ட பெங்களூர் நகர எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
சாலை விரிவாக்கம்: மேலும் 27,000 கோடி ரூபாய் செலவில் 73 கிலோமீட்டர் சாலை PPP மாடலில் அமைக்கப்படுவதாகக் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பட்ஜெட் அறிக்கையில் கூறினார். இத்திட்டம் இந்த ஆண்டுத் தொடங்கும் எனத் தெரிகிறது.
sky deck: பெங்களூருவில் 250 மீட்டர் உயரத்தில் sky deck அமைக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது, மேலும் இந்தத் திட்டத்திற்காகச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் இணைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் முக்கியச் சுற்றுலா தலமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
Bengaluru Metro: நம்ம மெட்ரோ கட்டுமானத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ், அரசாங்கம் ₹ 15,611 கோடியை வழங்கியது மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மார்ச் 2025க்குள், தற்போதைய நம்ம மெட்ரோ பாதைகளுடன் கூடுதலாக 44 கிமீ மெட்ரோ பாதை சேர்க்கப்படும்.
காவிரி குடிநீர்: BWSSB (பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்) காவிரி கட்டம்-5 திட்டத்தைச் செயல்படுத்தும், மேலும் இது 12 லட்சம் மக்களுக்கு தினமும் 110 லிட்டர் குடிநீரை வழங்கும். இதற்காக அரசுக்கு 5,500 கோடி ரூபாய்ச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது .
இரவு ஒரு மணி: பெங்களூருவில் வர்த்தக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். உணவு மற்றும் விருந்தோம்பல் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
100 ஏக்கர் நிலம்: நகரின் கழிவு மேலாண்மை முறையை மேம்படுத்த, BBMP நகரின் புறநகர்ப் பகுதியில் நான்கு வெவ்வேறு இடங்களில் 50 முதல் 100 ஏக்கர் நிலத்தை வாங்கி, அடுத்தச் சில தசாப்தங்களுக்கு நகரின் கழிவு மேலாண்மை அமைப்பை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications