ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 விமான பணியாளர்கள் உயிரிழந்தனர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிரிட்டனின் காட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் இந்த விபத்தை சந்தித்தது.
முதல் ஆளாக மீட்பு பணிக்கு சென்றவர்: விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் அங்கிருந்த ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதி மீது மோதி விபத்து நேர்ந்தது. இதனை அடுத்து விமானம் பயங்கரமாக தீப்பிடித்து எறிய தொடங்கியது. விமான விபத்து நேர்ந்த ஐந்து நிமிடங்களிலேயே தகவல் அறிந்து மீட்பு பணிக்காக சென்றவர் தான் ராஜூ பட்டேல் . அவர் தான் சென்றவுடன் அங்கே கண்ட காட்சிகள் என்ன என்பது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

முதல் 15 நிமிடங்கள் நடந்தது என்ன?: 56 வயதாக கூடிய ராஜூ படேல் தானும் தன்னுடைய மீட்பு குழுவினரும் விபத்து நிகழ்ந்த ஐந்து நிமிடங்களில் அந்த இடத்தை சென்று அடைந்து விட்டோம் என தெரிவித்திருக்கிறார். பிஜே மருத்துவக் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்கள் விடுதியில் மதிய உணவு அருந்தி கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்தில் நேர்ந்தது என குறிப்பிட்டு இருக்கும் அவர் தாங்கள் அங்கு சென்ற முதல் 15இல் இருந்து 20 நிமிடங்களுக்கு அந்த கட்டிடத்தின் அருகில் அல்லது விமானத்தின் அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.
புடவை, பெட்ஷீட்டில் மீட்பு பணி: விமான தீப்பற்றி எரிந்தது, அந்த தீ காரணமாக எங்களால் அருகில் கூட செல்ல முடியவில்லை என கூறும் ராஜூ படேல், தீயணைப்பு படையினர் மற்றும் மாநில அரசின் மீட்பு குழுவினர் வருகை தந்து தீயை கட்டுப்படுத்திய பின்னரே அங்கே மீட்பு பணியை தொடங்க முடிந்தது என கூறியுள்ளார். ஸ்ட்ரெச்சர் இல்லாததால் புடவை , பெட்ஷீட் உள்ளிட்டவற்றை ஸ்ட்ரெச்சராக மாற்றி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

800 கிராம் தங்கம் மீட்பு: எங்களால் முடிந்தவரை அனைவரையும் மீட்க வேண்டும் என்று தான் நாங்கள் அங்கே சென்றோம் ஆனால் அதற்குள் எல்லாம் கைமீறி போய்விட்டது என அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். பயணிகளின் உடைமைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததையும் தீயில் கருகி கிடந்ததையும் பார்த்து மனம் நொந்து போனதாக அவர் தெரிவித்திருக்கிறார் .இந்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 800 கிராம் மதிப்பு கொண்ட தங்க நகைகள், 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாஸ்போர்ட் மற்றும் பகவத் கீதை உள்ளிடவற்றை தங்களுடைய குழுமீட்டதாகவும் அவற்றை காவல்துறையினிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார் .
2008இல் இருந்து தொடரும் சேவை: தனிடையே மீட்கப்பட்ட உடைமைகள் அனைத்தும் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ராஜூபடேலை பொறுத்தவரை குஜராத் மாநிலத்தில் தன்னார்வ குழு ஒன்றை அமைத்துக் கொண்டு இதுபோல விபத்துகள் நிகழும் பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நிகழ்ந்த தொடர் வெடி குண்டு தாக்குதலின் போது தன்னுடைய குழுவினரோடு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார் அப்போது முதல் இந்த சேவையை அவர் தொடர்ந்து வருகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications