உங்களது பான் எண்ணையும் ஆதார் எண்னையும் இணைக்க இன்றே (மார்ச் 31. 2021) கடைசி நாள்.
இன்று பெரும்பாலான ஆவணங்களில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் பான் நம்பரையும், ஆதாரையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பல முறை கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வந்தது.
கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் தான், மார்ச் 31, 2021 தான் கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது.

அதெல்லாம் சரி நான் இது வரையில் பான் - ஆதாரினை இணைக்கவில்லை? இனி அடுத்து என்னவாகும்? என்னென்ன பிரச்சனைகள் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்குள் உங்கள் ஆதார பான் நம்பரை இணைக்காவிட்டால், உங்களுக்கு 1000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். அப்படி இல்லையெனில் உங்களது பான் எண் செயலிழக்கலாம்.
ஆதார் பான் எண் இணைக்காவிடில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். குறிப்பாக பான் கார்டை 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான் கார்டை பயன்படுத்தும் போது, அதற்கு பயன்படுத்த முடியாமல் போகலாம்.
வங்கிக் கணக்கு தொடங்க முடியாது. வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வேறு எந்த நிதிபரிமாற்றத்திற்கும் பான் கார்டினை பயன்படுத்த முடியாது.
ஆக நீங்கள் மீண்டும் எப்போது பான் எண்னையும் ஆதார் எண்ணையும் இணைக்கிறீர்களோ? அப்போது தான் மீண்டும் உங்களது பான் எண் செயல்பாட்டுக்கு வரும். இதற்கான வழிமுறைகள் வருமான வரி சட்டத்தில் விதி எண் 113AAAல் உருவாக்கிக் தரப்பட்டுள்ளன.
இதுவரை பல முறை கால அவகாசத்தினை நீட்டித்த அரசு இந்த முறை நீட்டிக்கவில்லை, இன்றே கடைசி நாளாக அறிவித்துள்ளது. ஆக நீங்கள் இணைத்திருந்தாலும் பரவாயில்லை. அப்படியே இணைத்திருந்தாலும், ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து கொள்ளவது நல்லது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications